Sports | விளையாட்டு
தோல்விக்கு பின் புலம்பிய தோனி- கெட்டதிலும் ஒரு நல்லது என குஷியில் சி எஸ் கே ரசிகர்கள்
இந்த ஐபிஎல் புதிய சீசனில் சென்னை சொதப்பல் கிங்ஸ் என பெயர் வாங்கி வருகின்றனர். கையில் ஈஸியாக ஜெயிக்க வேண்டிய மேட்சை விட்டு விட்டு தடுமாறி வருகின்றனர். 9 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, 6 தோல்விகளுடன் பாயிண்ட்ஸ் டேபிளில் ஆர்வத்து இடத்தில உள்ளனர். இதில் முன்பு ஒரு போட்டியில் ஜாதவ் சொதப்ப, நேற்று ஜடேஜா சொதப்ப ஐந்து வெற்றிகள் என இருக்க வேண்டியது மூன்று வெற்றிகள் என உள்ளது.

ipl points table
நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி காப்பிடல்ஸ் மோதின. டாஸ் வென்று தோனி பேட்டிங் எடுத்தார். கர்ரன் டக் அவுட் ஆக, அடுத்தடுத்த பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடினர். சி.எஸ்.கே அணி 20 ஓவர்கள் 4 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது. சேஸிங்கில் தவான் சதம் அடிக்க, டெல்லி அணி கடைசி ஓவரில் இலக்கை எட்டி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லி அணி வெற்றி பெற கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்டது. ரவீந்திர ஜடேஜா கடைசி ஓவரை வீசினார். அக்ஷர் படேல் 3 சிக்சர்கள் விளாசி டெல்லி அணிக்கு வெற்றி வாய்ப்பை பெற்று தந்தார். ரசிகர்கள் பலரும் பிராவோவிற்கு ஓவர் கொடுக்காமல் ஜடேஜாவிற்கு வழங்கியது ஏன் என கடுப்பாகினர்.
இந்த போட்டிக்கு பின் பேசிய சி.எஸ்.கே மகேந்திர சிங் தோனி” பிராவோ உடல் தகுதியுடன் இல்லை. களத்தில் இருந்து வெளியேறிய பிராவோ மீண்டும் களத்திற்கு வரவில்லை. எனவே இரண்டு ஆப்ஷன் தான் கரண் சர்மா மற்றும் ஜடேஜா. இதன் காரணமாகவே ஜடேஜாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
ஷிகர் தவானின் விக்கெட் மிகவும் முக்கியமானது. அவருக்கு சில கேட்ச்களை நாங்கள் தவறவிட்டோம். ஷிகர் தவான் எப்போதுமே நல்ல ஸ்டிரைக் ரேட்டை கொண்டு செல்வார். எனவே அவரது விக்கெட் மிக முக்கியமானது. இரண்டாவது இன்னிங்சில் பிட்ச் பேட்ஸ்மேன்களுக்கு சிறிது ஏதுவாக இருந்தது. எப்படி இருந்தாலும் ஷிகர் தவான் சிறப்பாக பேட்டிங் செய்தார்.” என தெரிவித்தார்.
பின்னர் போஸ்ட் மேட்ச் சந்திப்பில் பேசிய பயிற்சியாளர் பிளெமிங், பிராவோ அந்த ஓவர் வீச முடியவில்லை என வருத்தப்பட்டார். சில நாட்கள் அல்லது வாரம் கூட அவருக்கு ஒய்வு தேவை படலாம். அவரது உடல் தகுதி பற்றி ஆராய்ந்த பின்பே சொல்ல முடியும் என பேசினார்.

imran tahir
ஒருபுறம் சென்னை தோல்வி அடைந்த வருத்தத்தில், இருந்தாலும் ரசிகர்கள் பிராவோவிற்கு பதில் அணியில் பராசத்தி எக்ஸ்பிரஸ் இம்ரான் தாஹிர் சேர்க்கப்படுவார், அப்போ நிலைமை மாறும் சி எஸ் கே மீண்டும் வெற்றி பாதைக்கு செல்லும் என பேசி வருகின்றனர்.
தாஹிர் தனது பந்து வீச்சு மட்டுமன்றி, அடுத்த பௌலர்களுக்கும் டிப்ஸ் கொடுத்து ஊக்கப்படுத்துவார். மேலும் இவர் மைதானத்தில் உள்ள நேரத்தில் என்றுமே துறுதுறுவென இருப்பவர். பார்ப்போம் என்ன மாற்றம் நிகழப்போகிறதென்று.
