Connect with us
Cinemapettai

Cinemapettai

brainlara

Sports | விளையாட்டு

மூன்று போட்டிகளிலும் பிரைன் லாரா தேர்வு செய்துள்ள ஒரே வீரர்.. அடுத்து இந்திய அணியின் கேப்டனும் இவர்தான்

இந்திய அணியின் மிக முக்கிய வீரராக கே.எல் ராகுல் இருந்து வருகிறார். ஐபிஎல் தொடரில் முதன்முதலில் பெங்களூர் அணிக்காக விளையாடிய இவர் தற்போது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார்.

2020 ஐபிஎல் போட்டிகளில் மட்டும் கே எல் ராகுல் 14 போட்டிகளில் விளையாடி 670 ரன்கள் எடுத்து இருக்கிறார். இந்த வருட ஐபிஎல் தொடரில் தற்போது வரை அதிக ரன்கள் எடுத்த வீரர் இவர்தான்.

விக்கெட் கீப்பராக இருக்கும் இவர் அந்த அணியின் கேப்டனாக செயல்படுகிறார். அவரது அணி கடுமையான தோல்விகளைச் சந்தித்தாலும் ஒரு பேட்ஸ்மேனாக தொடர்ந்து தனது பங்களிப்பை அளித்து வருகிறார். எல்லா போட்டிகளிலும் நிலைத்து நின்று ஆடுகிறார். சிட்டுவேஷன் புரிந்து செயல்படுகிறார்.

மேலும் டெஸ்ட், டி20, ஒருநாள் ஆகிய மூன்று வடிவத்திற்கும் தேவையான ஒரு வீரர் அவர் என்று மேற்கிந்திய தீவுகள் அணியின் ஜாம்பவான் லாரா பெருமையாக கூறியுள்ளார்.

ஒரு கேப்டனாகவும் அணியை சிறப்பாக வழிநடத்துகிறார். துவக்கத்தில் அவரது அணி தோல்விகளை சந்தித்தாலும் தற்போது நன்றாகவே விளையாடி வருகிறது. அவர் பேட்டிங் செய்யும் விதம் தன்னை பெரிதும் கவர்ந்ததாக கூறியுள்ளார்.

kl-rahul

kl-rahul

Continue Reading
To Top