Tamil Cinema News | சினிமா செய்திகள்
பாய்ஸ் படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா.? இவர் நடிச்சா எப்படி இருந்திருக்கும்.!
ஷங்கர் இயக்கத்தில் சில வருடங்களுக்கு முன்பு வெளியாகி ஹிட் அடித்த திரைப்படம் பாய்ஸ் இந்த திரைப்படத்தில் சித்தார்த், நகுல், பரத் ஆகியோரும் நடித்திருந்தார்கள், இவர்கள் அனைவருமே தற்போது தனித்தனியாக ஹீரோவாக நடிக்க ஆரம்பித்து விட்டார்கள் மற்றும் நடிகரான தமன் சில படங்களில் இசையமைத்து வருகிறார்.

boys
இந்த படத்தில் ஹீரோயினாக நடிகை ஜெனிலியா நடித்து இருந்தார் இவர் தற்போது திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார், பாய்ஸ் திரைப்படம் வெளியாகி பல சர்ச்சைகளை சந்தித்தது, மகளிர் சங்கம் மாதர் சங்கம் என அனைவரும் போர்க்கொடி தூக்கினார்கள்.
இந்த நிலையை படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தது யார் என்ற தகவல் தற்போது தெரிய வந்துள்ளது இந்த படத்திலும் முன்னா என்ற கதாபாத்திரத்தில் சித்தார்த் நடித்திருந்தார். ஆனால் முதலில் இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு இயக்குனர் ஷங்கர் நடிகர் விஜயயை தான் அணுகியுள்ளார்,

ilayathalapathy-vijay
ஆனால் விஜய் தமிழன் படத்தில் நடித்துக் கொண்டிருந்ததால், படத்தின் கதையைக் கேட்டுவிட்டு தமிழன் படத்தில் நடித்துக் கொண்டிருப்பதால் தற்போது கால்ஷீட் இல்லாததால் நடிக்க மறுத்துள்ளார். இதைக் கேள்விப்பட்ட விஜய் ரசிகர்கள் தளபதி அந்த படத்தில் நடித்திருந்தால் செம மாஸாக இருந்திருக்கும் என கருது தெரிவித்து வருகிறார்கள்.
