சிறுவனின் கையை வெட்டி எறிந்தார்..! பெண்ணின் கொடூரசெயல்.

வீட்டு வேலை பார்த்த சம்பளத்தை கேட்ட சிறுவனின் கையை மெஷினில் வைத்து பெண் வெட்டிய சம்பவம் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் லாகூரில் அருகே உள்ளது சப்தாராபாத் என்ற கிராமம்.

இங்கு ஷப்காத் பீபியின் என்ற பெண்மணி வீட்டில் இர்பான் (13) என்ற சிறுவன் வேலை பார்த்து வந்தார். அவனுக்கு மாதம் ரூ.3000 என்று சம்பளம் வழங்குவதாக ஷப்காத் பீபி கூறினார்.

இந்நிலையில் தான் வேலை செய்த சம்பளத்தை இர்பான் முதலாளி பெண்ணிடம் கேட்டுள்ளார். ஒரு வாரமாக தொடர்ந்து கேட்டு வந்ததால் ஆத்திரம் அடைந்த முதலாளி பெண் கால்நடை தீவனங்களை வெட்டும் மிஷினில் சிறுவனின் கையை வைத்து வெட்டி எறிந்துள்ளார்.

இதனையடுத்து இர்பான் சிகிச்சைக்காக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக சிறுவனின் தயார் அங்குள்ள காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க சென்றார். ஆனால் அவரது புகாரை ஏற்க மறுத்து விட்டனர். அதனை தொடர்ந்து நீதிமன்றத்தை நாடியனார் சிறுவனின் தாயார்.

நீதிபதி உத்தரவிட்ட பிறகு ஷப்காத் பீபி அவரது சகோதரர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து ஷப்காத் பீபி சகோதரை போலீசார் கைது செய்தனர்.

Comments

comments

More Cinema News: