சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

முட்டி மோதும் பாய்ஸ் Vs கேர்ள்ஸ்.. யாரு கெத்து.? பிக்பாஸ் வைத்த சவால்

Biggboss 8: பிக்பாஸ் 8 சீசன் இன்னும் எதிர்பார்த்த அளவுக்கு சூடு பிடிக்கவில்லை என்று தான் தோன்றுகிறது. இருந்தாலும் போட்டியாளர்கள் முயற்சியை கைவிடாமல் கண்டன்டுக்காக ஏதேதோ செய்து வருகின்றனர்.

ஆனால் அது பார்வையாளர்களை கவரவில்லை என்பதே உண்மை. இதற்கு முக்கிய காரணம் டாஸ்க் கடுமையாக இல்லாதது தான். அந்த குறையை தீர்க்கும் அளவுக்கு இன்று சம்பவங்கள் இருக்கும் என தெரிகிறது.

அதன்படி தற்போது வெளியாகி உள்ள புரோமோவில் பிக்பாஸ் இந்த வாரம் நாமினேஷன் ஃப்ரீ பாஸ் கொடுக்க உள்ளார். அதற்காக சில போட்டிகள் நடத்தப்பட இருக்கிறது. இதில் மொத்தம் மூன்று லெவல் உள்ளது.

நீயா நானா போட்டி போடும் பிக் பாஸ் போட்டியாளர்கள்

எந்த வீடு அறிவு, திறமை, டீம் ஒர்க் ஆகியவற்றில் சிறந்தது என்பதை போட்டியாளர்கள் காட்ட வேண்டும். இதனால் போட்டியாளர்கள் மோதிப் பார்க்கலாம் வா என களத்தில் குதித்துள்ளனர்.

அதில் அறிவு சார்ந்த போட்டியில் பாய்ஸ் டீம் ஒரு அக்கப்போரை செய்து வைத்துள்ளது. அதாவது பிக் பாஸ் ஆயிரம் கோவில்கள் கொண்ட நகரம் எது என கேள்வி கேட்கிறார். ஆர்வக்கோளாறில் ஓடிவரும் ஆண்கள் பஸ்ஸரை அழுத்துவதற்கு பதில் அடித்து உடைத்து விடுகின்றனர்.

இதற்கு முந்தைய சீசன்களில் கூட கண்ணாடி, கட்டில் என பொருட்கள் சேதாரம் ஆனது. ஆனால் இது ரொம்பவும் புதுசு இதற்கு நிச்சயம் பிக் பாஸ் ஏதாவது தண்டனை கொடுப்பார். ஆக மொத்தம் இன்று வெளியாகி உள்ள முதல் ப்ரோமோ அடுத்த ப்ரோமோவுக்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -

Trending News