செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

பிக்பாஸ் இல்லத்தில் பரபரப்பு.. ஆக்ரோஷமாக மோதிக் கொள்ளும் பாய்ஸ் கேர்ள்ஸ் டீம்

Biggboss 8: பிக்பாஸ் வீட்டுக்கு நடுவில் சம்சாரம் அது மின்சாரம் படத்தில் வருவது போல் கோடு போட்டாலும் போட்டார்கள் பெரும் அக்கப்போராக இருக்கிறது. எங்க ஏரியா உள்ள வராத என பாய்ஸ் கேர்ள்ஸ் டீம் கெத்து காட்டி வருகின்றனர்.

இதில் ஆரம்பத்திலேயே பெண்கள் தங்களுக்கான படுக்கை அறையை கைப்பற்ற ஆண்கள் அணியிடம் ஒரு ஒப்பந்தம் போட்டனர். அதன்படி ஆண்கள் அணி மற்றொரு படுக்கையறையை எடுத்துக் கொண்டனர்.

ஆனால் அங்குதான் கிச்சன், ஸ்டோர் ரூம் என அனைத்தும் இருக்கிறது. பெண்கள் அணி அங்கு வரவேண்டும் என்றால் டாஸ்க் செய்ய வேண்டும் என்பது விதிமுறை. இது சில பஞ்சாயத்தும் நடந்தது.

நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் பாய்ஸ் கேர்ள்ஸ்

அதில் நேற்று தீபக் ஸ்டோர் ரூம் போவதற்கு கேர்ள்ஸ் டீமுக்கு ஒரு டாஸ்க் கொடுத்தார். இதனால் கடுப்பான தர்ஷிகா லிவிங் ரூம் நம் கண்ட்ரோலில் தான் இருக்கிறது. ஆண்களின் வரவேண்டும் என்றால் ஒரு டாஸ்க் கொடுக்கலாம் என தன் டீமுடன் சேர்ந்து திட்டம் போட்டார்.

இந்த பஞ்சாயத்து தான் நேற்று முழுவதும் நடைபெற்றது. அதை அடுத்து தற்போது வெளிவந்திருக்கும் முதல் ப்ரோமோவிலும் இது ஆக்ரோஷமாக வெடித்துள்ளது. இரு அணிகளும் நேருக்கு நேர் மோதி கொள்கின்றனர்.

பெண்கள் ஆண்களை டாஸ்க் கொடுத்து தவிக்க விட வேண்டும் என போராடுகின்றனர். ஆனால் பெண்களிடம் இறங்கி போக கூடாது என பாய்ஸ் டீம் எகிறிக்கொண்டிருக்கிறது. இதனால் இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு தெரியாமல் மொத்த வீடும் குழப்பத்தில் இருக்கிறது.

இதில் அடுத்த கட்ட முடிவை பிக்பாஸ் எடுக்கலாம் அல்லது எனக்கு இதுதான் வேண்டும் நல்லா அடிச்சுக்கோங்க என வேடிக்கை பார்க்கலாம். இதில் இரண்டாவது நடப்பதற்கு தான் அதிக வாய்ப்பு இருக்கிறது. பார்க்கலாம் ஆண்களா பெண்களா என.

- Advertisement -

Trending News