fbpx
Connect with us

வைரலாகுது பும்ரா போலவே பந்துவீச முயற்சி செய்யும் ஆஸ்திரேலிய சிறுவனின் வீடியோ. பும்ராவின் ரியாக்ஷன் இது தான் ..

Sports / விளையாட்டு

வைரலாகுது பும்ரா போலவே பந்துவீச முயற்சி செய்யும் ஆஸ்திரேலிய சிறுவனின் வீடியோ. பும்ராவின் ரியாக்ஷன் இது தான் ..

ஜஸ்பிரித் பும்ரா

குஜராத்தில் பிறந்தவர். அந்த ஸ்டேட் அணிக்காக விளையாடி வந்தவரை அசத்தலான டாலேண்ட் என் உணர்த்த மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் 2013 ஆம் ஆண்டு தங்கள் டீம் சார்பில் ஐபில் இல் களம் இறக்கினார்கள். அதன் பின் இவர் வளர்ச்சி அசுர வகையறா தான். இன்று மூன்று வித பார்மட்களிலும் இந்தியாவின் சிறந்த பந்துவீச்சாளர் இவர் தான்.

யார்கர் மன்னன் என்ற பெயரும் இவருடன் ஒட்டிக்கொண்டது. பும்ராவின் அசாத்திய திறமையும் துல்லியமும் உலகின் முன்னணி பேட்ஸ்மேன்களுக்கு இவரை சிம்ம சொப்பனம் ஆக்கி விட்டது.

ROHIT-BUMRAH

ஜாகிர் கான் விலகிய பின்னர், அவர் இடத்தை நிரப்ப வெகு நாட்களாக இந்திய அணி சிரமப்பட்டுக் கொண்டிருந்தது. இப்போது அவரையல்ல, அவரைவிட மேன்மையான ஒரு திறமைசாலி கிடைத்து விட்டார் என்றால் மிகையாகாது.

இந்திய ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடர் ஜெயிக்க முக்கிய காரணம் இவர் தான். இந்நிலையில் ட்விட்டரில் பும்ரா போல் தாவி, துள்ளி குதித்து பந்து போடும் இந்த சிறுவனின் வீடியோ ட்ரெண்டிங் ஆனது.

பும்ராவும் அந்த விடியோவை பார்த்துவிட்டு. “இந்த சிறுவன் செம்ம க்யூட். அவனுக்கு என் வாழ்த்துக்களை தெரிவியுங்கள்” என்று பதில் தட்டினார்.

முன்பே சோயிப் அக்தர், லசித் மலிங்கா பார்த்து சிறுவர்கள் இன்ஸ்பயர் ஆக இந்த ஜெனரேஷன் பொடுசுகளுக்கு பும்ரா தான் ரோல் மாடல்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Sports / விளையாட்டு

Advertisement

Trending

To Top