Connect with us

Cinemapettai

உன்ன பிடிக்கல.. காதலித்த பெண் சொன்னதால்.. ரஞ்சித் எடுத்த விபரீத முடிவு

boys-suicide

Tamil Nadu | தமிழ் நாடு

உன்ன பிடிக்கல.. காதலித்த பெண் சொன்னதால்.. ரஞ்சித் எடுத்த விபரீத முடிவு

சென்னை புழல் கதிர்வேடு ஜெய் மாருதி தெருவைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது 25). ஒரு தனியார் காப்பீடு நிறுவனத்தில் வேலை செய்துவந்தார்.

அதே நிறுவனத்தில் வேலை செய்யும் ஒரு பெண்ணை, ரஞ்சித்குமார் ஒருதலையாக காதலித்ததாராம். ஆனால் இவரது காதலை அந்த பெண் ஏற்க மறுத்துவிட்டதாக தெரிகிறது. இதனால் மனம் உடைந்த ரஞ்சித் குமார் நேற்று முன்தினம் இரவு தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

திங்கட்கிழமை காலையில் எழுந்துபார்த்த அவரது தந்தை ராஜா, தனது மகன் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த புழல் போலீசார், தூக்கில் தொங்கிய ரஞ்சித்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து ரஞ்சித்குமார், ஒரு தலை காதல் தோல்வியால் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என விசாரித்து வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top