Tamil Cinema News | சினிமா செய்திகள்
ரஜினி விஜய் நடத்திய ராஜ்ஜியம்.. போன வருடம் தமிழ் சினிமாவின் மொத்த வசூலில் இவர்கள் பங்கு தெரியுமா
நடிகர் நடிகைகளின் புதிய வரவுகள் தமிழ் சினிமாவில் பல சாதனைகளைப் புரிந்து வருகின்றது.
Published on

நடிகர் நடிகைகளின் புதிய வரவுகள் தமிழ் சினிமாவில் பல சாதனைகளைப் புரிந்து வருகின்றது. அந்த வகையில் போன வருடம் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் கொடுத்த படங்களின் வருமானங்களும் அதிகரித்துக் கொண்டே போகிறது.
இதுவரை இல்லாத அளவிற்கு போன வருடம் பாக்ஸ் ஆபீஸ் முலம் வந்த வசூல் அதிகம் என்று சினிமா வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன. இதற்கு முக்கியமான காரணம் 2.o மற்றும் சர்கார் படங்கள்.
கடந்த வருடம் மட்டும் தமிழ் சினிமா மூலம் கிடைத்த பாக்ஸ் ஆபிஸ் ஹிட் வருமானம் வசூல் எவ்வளவு என்றால் ரூபாய் 1500 கோடி.
இந்த மொத்த வசூலில் சர்கார், 2.O மட்டும் 70% க்கு மேல் செய்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த இரண்டு படங்களும் பெரும் வசூல் வேட்டை நடத்தியதாம்.
