பொங்கலுக்கு வெளியான படங்களில் ரஜினிமுருகன் படத்தின் வசூல் தொடர்ந்து நன்றாக இருப்பதாக திரையரங்க உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

இதனால் பாக்ஸ் ஆபிஸின் வசூல் ராஜாவாக மாறியிருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.

இந்த பொங்கல் தினத்தில் கதகளி, ரஜினிமுருகன், தாரை தப்பட்டை மற்றும் கெத்து என்று 4 படங்கள் வெளியாகின.

அதிகம் படித்தவை:  ஜிவி.பிரகாஷ் சிவகார்த்திகேயன் மோதல்??

இதில், சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சூரி, சமுத்திரக்கனி, ராஜ்கிரண் மற்றும் பலர் நடிப்பில் வெளியான ரஜினிமுருகன் திரைப்படம் சென்னை பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து வசூல் சாதனை நிகழ்த்தி வருகிறது. இதுவரை சென்னையில் மட்டும் இப்படம் 2.42 கோடிகளை குவித்திருக்கிறது. வார நாட்களிலும் கூட்டம் குறையவில்லை என்பதால் பொங்கலுக்கு வெளியான படங்களில் நம்பர் 1 என்ற இடத்தை எட்டிப் பிடித்திருக்கிறது ரஜினிமுருகன்.