Tamil Cinema News | சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிசை திணறடிக்கும் படங்கள்.! வசூல்விவரம் இதோ.!
தமிழ்சினிமாவில் வருடத்திற்கு 200க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகின்றன ஆனால் அனைத்து படங்களும் வெற்றி அடைவதில்லை அதேபோல் நல்ல கதைகளுக்கு எப்போதும் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருக்கும். மேலும் பெரிய ஹீரோக்களின் படங்கள் என்றாலும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு இருக்கும்.
இந்த வருடத்தின் ஆரம்பத்தில் சரியான படங்கள் வெளியாவததால் ரசிகர்கள் கொஞ்சம் வருத்தம் அடைந்தார்கள் ஆனால் தற்பொழுது இவர்கள் போதும் போதும் என்ற அளவுக்கு அடுத்தடுத்து வெளியாகும் படங்கள் அனைத்தும் ஹிட் ஆகி கொண்டே வருகின்றன, அதுமட்டுமில்லாமல் பாக்ஸ் ஆபிஸிலும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் தற்போது வெளியாகிய படங்களில் வெற்றிகரமாக இன்னும் திரையில் ஓடிக் கொண்டிருக்கும் படங்களின் வசூல் விவரங்களை இப்பொழுது இங்கே பார்க்கலாம். வட சென்னை- ரூ. 3.06 கோடி (5 நாட்கள்), சண்டக்கோழி 2- ரூ. 1.92 கோடி (4 நாட்கள்),96- ரூ. 4.75 கோடி (18 நாட்கள்), ராட்சசன்- ரூ. 2.21 கோடி (17 நாட்கள்)
