Tamil Cinema News | சினிமா செய்திகள்
தலைவர் vs தல – சண்டையை கிளப்பிவிடும் சினிமா நிறுவனங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல்

தல , தலைவர் பொங்கல் என்றே பேசப்பட்டது ஆரம்பம் முதலே. இரண்டு நடிகர்களும், சினிமா துறையில் யாரையும் போட்டி எனவும் எதிரி எனவும் நினைக்காதவர்கள் என்பதும் நாம் அறிந்த விஷயமே. தல தலைவர் சாமானிய ரசிகனுக்கே இருவரையுமே பிடிக்கும். இரண்டு நபர்களும் மாஸ் படங்களில் நடிக்க முடிவெடுத்தல், திருவிழா கொண்டாட்டம் தான். தமிழகத்தில் நிறைய தியேட்டர்கள் இருப்பதால் இரண்டு படங்களுக்குமே நல்ல ஓப்பனிங் கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
பொங்கல் விடுமுறையை முன்னிட்டு இருவரின் படமும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இரண்டு ஹீரோக்குமே படத்தில் டூயல் கெட் அப் தான் ஓல்ட் அண்ட் யூத் லுக்.இரண்டு படங்களுக்குமே நல்ல பாசிட்டிவ் விமர்சனமே வந்தது.
இந்நிலையில் அதிகாரபூர்வ பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் என்ன என்று வெளியாகி உள்ளது. பேட்ட தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸும், விஸ்வாசத்தை வெளியிட்ட KJR ஸ்டுடியோஸும் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
பேட்ட
வரும் ஞாயிறு வரும் பட்சத்தில், அதாவது 11 நாட்களில் தமிழகத்தின் வசூலில் மட்டும் பேட்ட 100 கோடி கடக்கும் என்கின்றனர். வெளிநாடுகளில் இது வரைய வசூல் 65 கோடியாம். மேலும் தமிழகம் தவிர்த்து மத்த ஸ்டேட், ஹிந்தி, தெலுங்கு டப்பிங் தகவல் வெளியாகவில்லை.
விஸ்வாசம்
பேட்ட வசூல் நிலவரம் வந்த பின் உடனே கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் விஸ்வாசம் படத்தின் வசூலை அறிவித்தது சற்று சந்தேகத்தை வர வைக்கிறது. வேண்டுமென்றே போட்டி போட்டு அறிவித்து சண்டையை வரவைப்பது போல உள்ளது.
நேற்றோடு அதாவது 9 நாட்களில் விஸ்வாசம் தமிழகத்தில் மட்டும் 125 கோடி கடந்து விடும் என்று சொல்லியுள்ளனர்.
சினிமாபேட்டை கமெண்ட்ஸ்
பேட்ட, இல்ல விஸ்வாசம் யார் ஜெயித்தார் என்பதை விட, தமிழ் சினிமா இங்கு வென்றதே நமக்கு மகிழ்ச்சி. ஆக மொத்தத்தில் சினிமா ரசிகர்களுக்கும், அதனை நம்பி இருக்கும் அனைவரின் பேட்டையிலும் இது விஸ்வாசமான பொங்கல் தான். ராமன் ஜெயிச்சாலும் ராவணன் ஜெயிச்சாலும் எனக்கு ஒரு கவலை இல்லை.
