ரஜினிகாந்த் நடித்துள்ள கபாலி படம் இன்று தமிழகத்தில் ரிலீஸானது. படம் வெளியிடும்போது தியேட்டர்களில் எந்தவித அசம்பாவிதமும் நடந்துவிடாமல் தடுக்க 300க்கும் மேற்பட்ட பவுன்சர்களை பணியமர்த்தி தயாரிப்பாளர் தாணு ஒப்பந்தம் செய்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பவுன்சர்கள் நேற்று சென்னைக்கு வந்தனர். அவர்களுக்கு தங்கும் வசதி செய்து கொடுக்காமல் பணியும் அளிக்காமல் தாணு மெத்தனமாக இருந்ததாக கூறப்படுகிறது.

அதிகம் படித்தவை:  நெருப்புடா பாடகருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த விஜய்!

இதை கண்டித்து பவுன்சர்கள் நள்ளிரவில் சென்னை தி.நகரில் உள்ள தாணுவின் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அதிகம் படித்தவை:  விஜய் படத்துடன் புரூஸ்லீ வரல…! ஆனா விஜய்யை விட மாட்டார் ஜி.வி.பிரகாஷ்

இதற்கிடையே கபாலி படத்தை பார்த்த ரஜினி ரசிகர்களே படம் மிகவும் ஸ்லோவாக உள்ளது என்று தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.