fbpx
Connect with us

8 வருடம் கழித்து இணையும் கும்கி ஜோடி.. விட்ட மார்க்கெட்டை பிடிக்க பிரபல இயக்குனரிடம் தஞ்சம்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

8 வருடம் கழித்து இணையும் கும்கி ஜோடி.. விட்ட மார்க்கெட்டை பிடிக்க பிரபல இயக்குனரிடம் தஞ்சம்

நான்கு வருடங்கள் வாய்ப்பு இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கும் இரண்டு நாயகிகளை ஒரே படத்தில் இணைத்து வாய்ப்பு கொடுத்திருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன். அதேபோல் ஹீரோவும் நீண்ட நாட்களாக ஒரு வெற்றி கிடைக்காமல் தடுமாறிக் கொண்டிருப்பவர் தான்.

சுசீந்திரன் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த படங்கள் அனைத்துமே தோல்வியை சந்தித்து வருகின்றனர். எப்படியாவது ஹிட் கொடுத்துவிட வேண்டும் என தற்போது கமர்ஷியல் அம்சமுள்ள கதையை தேர்வு செய்து இயக்க உள்ளார்.

ஆனால் அதை சுத்தமாக மார்க்கெட் இல்லாத நடிகர்களை வைத்து எடுக்க முயற்சிப்பது தான் தவறு என்கிறது கோலிவுட் வட்டாரம். சுசீந்திரன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்க உள்ள படத்தில் நாயகிகளாக ஸ்ரீதிவ்யா மற்றும் லட்சுமி மேனன் இருவரும் நடிக்க உள்ளனர்.

lakshmi-menon

lakshmi-menon

இவர்கள் இருவரும் ஏற்கனவே சுசீந்திரன் இயக்கத்தில் நடித்தவர்கள் தான். இருந்தாலும் விக்ரம் பிரபுவுக்கும் சமீபகாலமாக தமிழ் சினிமாவில் சுத்தமாக மார்க்கெட் இல்லை. அதுமட்டுமல்லாமல் படங்கள் தோல்வியை சந்தித்து வருகின்றனர்.

sridivya

sridivya

இப்படி மொத்தமும் தோல்வியை கொடுத்த முகங்கள் ஒரே படத்தில் இணைந்து நடித்தால் எப்படி படத்தின் வியாபாரம் இருக்கும் என தயாரிப்பாளர்கள் யோசித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆனால் இந்த கூட்டணியில் களம் இறங்குவதில் உறுதியாக இருக்கிறாராம் சுசீந்திரன். நீங்க எடுப்பீங்க யாரு பார்க்கிறது என புலம்புகிறார்கள் விநியோகஸ்தர்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top