மெட்டிஒலி சீரியலில் போஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார் வெங்கட் அதன் பின் தான் இவர் போஸ் வெங்கட் ஆக மாறினார்.பின்னர் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு மாறினார்.

கிடைக்கும் ரோல் சின்னதாக இருந்தாலும் வரும் வாய்ப்பை பயன் படுத்தி கிட்டத்தட்ட 65 படங்கள் நடித்து விட்டார். வழுக்கைத்தலை ரஃப் அப்ரோச் என்று கவண் படத்தில் வில்லனாக அசத்தியிருந்தார்.

தற்பொழுது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் தீரன் படத்தில் இன்ஸ்பெக்டர் சத்யாவாக நடித்து பலரின் மனம் கவர்ந்தார் போஸ் வெங்கட். தீரன் அதிகாரம் ஒன்று படத்தை பற்றி இணையதளம் ஒன்றிற்கு அளித்த பேட்டியின் தொகுப்பு ..

‘‘இந்த நேரத்தில் இயக்குநர் வினோத்துக்கும், நாயகன் கார்த்திக்கும் என்னுடைய நன்றிகள். சிவாஜி, தலைநகரம், சிங்கம், கோ, கவண் என்று பரவலாக கவனிக்கப்படும் நடிகராக நான் இருந்தாலும், தீரன் எனக்கு ஒரு தனி அடையாளத்தை தந்திருக்கிறது.

அதிகம் படித்தவை:  சமுத்திரக்கனி நடிப்பில் ஆண் தேவதை படத்தின் ட்ரைலர் !

தமிழ்நாடு அரசாங்கத்தின் அப்பாய்ட்மெண்ட் கொடுக்கப்படாத போலீஸ் நான். அந்த அளவுக்கு நாற்பதுக்கும் மேற்பட்ட படங்களில் நான் போலீசாக நடித்திருக்கிறேன்.
அவை அனைத்திலிருந்தும் முற்றிலுமாக வேறுபட்டவன் தீரன் சத்யா. நிஜப் போலீசின் மேனரிசம், அவர்களது அன்றாட பிரச்சினைகள், குடும்பத்துடனான உறவு என்று இயல்பான போலீஸ்காரர் போலவே நடித்திருப்பதாக விமர்சகர்கள் பாராட்டி வருகிறார்கள். விமர்சகர்கள் அனைவருக்கும் நன்றி.

இந்த வெற்றிக்கு இயக்குனரோடு சேர்த்து மற்றுமொரு முக்கிய காரணம் கார்த்தி.
கொளுத்தும் வெயில், ராஜஸ்தான் பாலைவன சூழல் இடையே இன்னொரு புழுதிப் புயல் போல, கதாப்பாத்திரத்துக்குள் முழுவதுமாக வாழ்ந்து கொண்டிருந்தார் கார்த்தி.  அவருடன் சேர்ந்து நிற்கையில் தானாகவே ஒட்டிக் கொண்டது அவரது எனர்ஜி.

அதிகம் படித்தவை:  இப்படித்தான் பார்ட்டியை என்ஜாய் செய்யணும். வைரலாகுது "குலேபா" பாடலுக்கு குத்தாட்டம் போடும் நிவேதா தாமஸின் வீடியோ.

ஏற்கனவே சிங்கத்தில் சூர்யாவுடனும் நடித்த அனுபவம் உண்டு. சூர்யா புல் பாட்டில் விஸ்கி என்றால், கார்த்தி காக்டெயில் மிக்ஸ். இருவரும் எனர்ஜி பூஸ்டர்கள், என்ன இருவருக்கும் குடிக்கும் பழக்கம் தான் இல்லை, அவர்களது அப்பாவைப் போல்.

தயாரிப்பாளர் உள்ளிட்ட தீரனில் உழைத்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.” என்று கூறியுள்ளார்.