மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்காக அவரது கணவர் போனி கபூர் ஒரு காதல் பரிசை கொடுக்க இருப்பதாக நெருங்கிய வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

sridevi

பாலிவுட்டில் நுழைந்த ஸ்ரீதேவி, பிரபல நடிகர் மிதுனை முதலில் திருமணம் செய்து கொண்டார். ஆனால், ஏற்கனவே திருமணம் செய்து கொண்ட மிதுன், ஸ்ரீதேவியை தனது மனைவியாக அறிவிக்க தயக்கம் காட்டி வந்தார். இதற்கிடையே, ஸ்ரீதேவியின் படங்களை பார்த்த போனி கபூருக்கு அவர் மீது ஒரு ஈர்ப்பு வந்தது. அவரை வைத்து ஒரு படத்தை தயாரிக்க வேண்டும் என லட்சியமாக கொண்டு இருந்தார். 1983-ம் ஆண்டு வெளியான மூன்றாம் பிறையின் இந்தி பதிப்புக்கு பிறகு ஸ்ரீதேவியின் திரை வாழ்க்கை ஓகோவென அமைந்தது. இதே வேளையில், போனி கபூருக்கு அவரது பெற்றோர்கள் பார்த்து வைத்த பெண் தான் மோனா. இருவரின் திருமண வாழ்வும் ஒரு சேர வேறு பாதையில் சென்றது.

தனது லட்சியத்தை மிஸ்டர் இந்தியா படம் மூலம் நிவர்த்தி செய்தார் போனி கபூர். ஸ்ரீதேவி நடித்த இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. அந்த படப்பிடிப்பில், மிதுனுடனான தனது திருமண வாழ்வின் ரகசியத்தை போனி கபூரிடம் ஸ்ரீதேவி வெளிப்படுத்தினார். போனி கபூரின் ஆறுதல் வார்த்தைகள் அவரைத் தேற்றின. மிதுனிடம் இல்லாத காதலை போனி கபூரிடம் ஸ்ரீதேவி கண்டார். இதனை தொடர்ந்து, இருவரும் காதலில் விழுந்தனர். போனிக்கு தனது முதல் மனைவி மூலம் அப்போதே இரு குழந்தைகள் பிறந்திருந்தனர். 1996ம் ஆண்டு ஸ்ரீதேவியை போனி திருமணம் செய்து கொள்ள பெரும் சர்ச்சை வெடித்தது. இதையடுத்து, முதல் மனைவியுடன் விவாகரத்து பெற்ற போனி, தனது காதல் மனைவியுடன் வாழ்க்கையை தொடர்ந்தார். பல வருடங்களாக இருவருக்கும் ஒருவர் மீது வற்றாத காதல் கரை புரண்டது.

அழகாக சென்று கொண்டிருந்த இக்குடும்பத்தில் இந்த வருட பிப்ரவரி மாதம் பெரும் இடியை இறக்கியது. துபாயில் திருமணத்திற்காக சென்ற ஸ்ரீதேவி, எதிர்பாராத விதமாக அங்கு மரணமடைந்தார். குடும்பமே சோகத்தில் முழ்கியது. காதல் மனைவியை இழந்து தனி மரமாக மாறினார் போனி.

sridevi

இந்நிலையில், தனது மனைவியின் வாழ்க்கையை ஆவணப்படமாக எடுக்க தயாரிப்பாளரான போனி கபூர் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. ஸ்ரீ, ஸ்ரீதேவி மற்றும் ஸ்ரீ மேடம் உட்பட 20 டைட்டில்களை போனி கபூர் பதிவு செய்திருப்பதாக பாலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.