Tamil Cinema News | சினிமா செய்திகள்
போனி கபூரின் தயாரிப்பில் நடிக்க நோ சொன்ன சல்மான் கான்..

நடிகர் சல்மான்கான் அர்ஜூன் கபூர் மீது இருக்கும் கோபத்தால் அவரது தந்தை போனி கபூரின் நிறுவன தயாரிப்பில் நடிக்க நோ சொல்லி இருக்கிறார்.
எழுத்தாளரான சலீம் கான் மற்றும் அவர் முதல் மனைவி சல்மா கானுக்கு பிறந்தவர் சல்மான் கான். அர்பாஜ் கான் மற்றும் சோஹேல் கான் என்ற இரண்டு சகோதரர்களும், அல்விரா மற்றும் அர்பிதா எனும் இரண்டு சகோதரிகளும் இவருக்கு இருக்கிறார்கள். நடிப்பின் மீது அதிக ஆர்வம் கொண்ட சல்மான் கான் அதே அளவு பாசத்தை தன் குடும்பத்தின் மீதும் வைத்து இருக்கிறார். தனக்கு துரோகம் செய்தவர்களை கூட மன்னிக்கும் சல்மான்கான் குடும்ப உறுப்பினர்களிடம் சீண்டியவர்களை கண்டிப்பாக மன்னிக்க மாட்டார். அந்த கோபம் தான் அர்ஜூன் கபூர் மீதும் சல்மான் கானுக்கு இருக்கிறது.
சல்மான் கானின் தம்பி அர்பாஜ் கானின் முன்னாள் மனைவி மலாய்க்கா. இவருக்கும், அர்ஜுனுக்கும் பல நாட்களாக உறவு இருப்பதாக பாலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. இந்த தொடர்பு அர்பாஜை நீதிமன்ற படியேற வைத்தது. தொடர்ந்து இருவரும் மனப்பூர்வமாக விவாகரத்து பெற்றனர். தனது தம்பியின் வாழ்க்கையில் விளையாடிய அர்ஜுன் மீது சல்மான் கடும் கோபத்தில் உள்ளார்.
இந்நிலையில் தான் போனி கபூர் என்ட்ரி 2 மற்றும் வாண்டட் 2 ஆகிய படங்களை தயாரிக்க இருந்தார். அப்படத்தில் சல்மான்கானை நடிக்க வைக்க முடிவு செய்தனர். ஆனால், அர்ஜூன் கபூரால் அந்த வாய்ப்பில் நடிக்க சல்மான் கான் விரும்பவில்லையாம். படத் தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வந்த போது, அவர்களிடம் கதைக் கூட கேட்காமல் திருப்பி அனுப்பி இருப்பதாக கூறப்படுகிறது. இருந்தும், போனி கபூரின் மீது சல்மானுக்கு எந்த வருத்தமும் இல்லை என்றும் பாலிவுட் தரப்பில் பேச்சுகள் அடிப்பட்டு வருகிறது.
