போடா மணியின் உயிரை காப்பாற்ற உதவிய நடிகர்.. இந்த நடிகருக்கு ஹீரோவை விட காமெடி நல்லா வரும்

உடல் நிலை சரியில்லாத போது தனக்கு உதவிய தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மற்றும் திரைப்பட பிரபலங்களுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக நகைச்சுவை நடிகர் போண்டாமணி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்

தமிழில் 250-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்த போண்டாமணி, சமீபத்தில் இதய நோய் ஏற்பட்டு மருத்துவமனையில் சீரியசாக அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனிடையே தற்போது அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு பல பேட்டிகளில் தன்னுடைய உடல் நிலையை குறித்து பேசி வருகிறார்.

அப்போது, தான் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது சாக்கடையில் நடிக்கும் காட்சி அமைந்திருந்தது. அந்த சமயம் சாக்கடை போன்று செட் அமைக்க முடியாததால், உண்மையான சாக்கடையில் குதித்து நடித்தேன். அதன் பின் சற்று உடல்நிலை சரியில்லாமல் போனது என்று போண்டாமணி தெரிவித்தார் பின்னர் கோவாவில் படப்பிடிப்பில் இருந்தபோது அங்கு திடீரென மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதித்தார்கள்.

அதன் பின்னரே சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தனது நண்பரான கிரேஸ் முருகன் என்பவரின் உதவியோடு தன் மகனை அழைத்துக்கொண்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். அப்போது அமைச்சர் கருணாநிதியின் உதவியாளர், சினிமா பட தயாரிப்பாளர் பூச்சி முருகன், விவேக்கின் நண்பரான செல் முருகன் உள்ளிட்டோர் தனக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற உதவியாக இருந்தனர்.

பல வருடங்கள் கழித்து அரசு மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற்ற நிலையில், அனைத்து மருத்துவர்களும் எனது உயிரை காப்பாற்ற போராடினார்கள். மேலும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தனக்கு தனிப்பட்ட முறையில் ஆறுதல் தெரிவித்ததற்கு நன்றி என்றும் போண்டாமணி தெரிவித்துள்ளார். இதனிடையே தற்போது தான் பூரண குணம் அடைந்து விட்டதாகவும், இதயத்தில் வலி ஏற்பட்ட போது அதிகமாக பயந்ததாகவும் போண்டாமணி தெரிவித்தார்.

மேலும் நடிகர் சந்தானத்தை பற்றி பேசிய போண்டாமணி, நீங்கள் ஏன் நகைச்சுவை நடிகராக நடிக்காமல் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றும் தற்போது தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்றும் போண்டாமணி கேட்டுள்ளார். அதற்கு சந்தானம் நான் ஹீரோவாக நடிப்பதற்காக தான் சினிமாவில் வந்தேன் என்னுடைய ஆசையை தான் நிறைவேற்றி வருகிறேன் என போண்டாமணியிடம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

- Advertisement -spot_img

Trending News