Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஒரே படத்தில் ஓகோ என்று மாறிய சூரரைப்போற்று அபர்ணா பாலமுரளி.. இனிமேல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
சினிமாவை பொறுத்தவரை ஏதாவது ஒரு படம் சிறப்பாக அமைந்து விட்டால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் அவரைத் தேடி வரும் என்பது தெரிந்த விஷயம் தான்.
ஆனால் அந்த ஒரு வெற்றி படம் எப்போது என்பதுதான் கேள்விக்குறி. ஏற்கனவே தமிழ் சினிமாவில் சர்வம் தாள மயம், 8 தோட்டாக்கள் போன்ற படங்களில் நடித்தவர் தான் அபர்ணா பாலமுரளி.
மலையாளத்தில் பிரபல நடிகையாக இருந்தாலும் சம்பளம் மிகக் குறைவுதான். தென்னிந்திய சினிமாவில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் மட்டுமே நடிகைகளுக்கு சம்பளம் அதிகமாக வழங்கப்படுகிறது.
அந்த வகையில் தமிழில் எப்படியாவது முன்னணி நடிகையாக வந்து விட வேண்டும் என அவர் எடுத்த முயற்சிகள் தோல்வியை பெற்ற நிலையில் தற்போது விடாமுயற்சியால் அதை மாற்றி விட்டார்.
சமீபத்தில் அமேசான் தளத்தில் வெளிவந்து பட்டையை கிளப்பிக்கொண்டிருக்கும் சூரரைப்போற்று படத்தில் சூர்யாவுக்கு நிகரான பொம்மி கதாபாத்திரத்தில் மிரட்டியிருந்தார் அபர்ணா.

aparna-balamurali-cinemapettai
அதன் விளைவு தற்போது தமிழில் பல பட வாய்ப்புகள் அவரைத் தேடி வந்து கொண்டிருக்கிறதாம். அதுமட்டுமில்லாமல் சில லட்சங்கள் வாங்கிக் கொண்டிருந்த அபர்ணா பாலமுரளியின் சம்பளம் தற்போது ஒரு கோடியை தாண்டி விட்டதாம்.
விடாமுயற்சி! விஸ்வரூப வெற்றி!
