Tamil Cinema News | சினிமா செய்திகள்
அடுத்தடுத்து பிரபலங்களின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்.. பரபரப்பில் கோலிவுட்!
தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதாபாத்திரங்களை எடுத்து கெத்தாக நடிப்பவர் தான் நடிகர் தனுஷ். மேலும் இவர் கோலிவுட்டின் முன்னணி நடிகராகவும் திகழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில் நடிகர் தனுஷின் அபிராமபுரம் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது தனுஷின் அபிராமபுரம் வீட்டில் குண்டு வெடிக்கப் போவதாக போலீஸ் கன்ட்ரோல் ரூமுக்கு ஒருவர் போன் செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து தனுஷ் வீட்டிற்கு வந்த வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்துள்ளனர். இது போலியான மிரட்டல் என்பது தெரியவந்ததும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேலும் இவ்வாறு வெடிகுண்டு மிரட்டல்கள் விஜய், அஜித், ரஜினிகாந்த் ஆகியோர் வீடுகளுக்கும் விடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் தனுஷ் எல் ராய் இயக்கத்தில் ‘அத்ரங்கி ரே’ எனும் படப்பிடிப்பில் இருந்ததால், மிரட்டல் செய்தி அறிந்த உடனேயே அவர் அவருடைய வீட்டில் உள்ளோருக்கு போன் செய்து பேசியுள்ளார் என்ற தகவலும் கிடைத்துள்ளது.

karnan-dhanush
இவ்வாறு திரையுலகை சேர்ந்த பலரின் வீடுகளுக்கு அடிக்கடி போலியான வெடிகுண்டு மிரட்டல் வந்து கொண்டிருப்பது போலீசாரையும் ரசிகர்களையும் அதிக அளவில் வெறுப்பேற்றி உள்ளது.
தனுஷை அடுத்து தேமுதிக தலைவர் மற்றும் நடிகருமான விஜயகாந்த் வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்து இருப்பதால் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
