அமெரிக்காவில் பிரபலமான பாடகிகளில் ஒருவர் Ariana Grande. இவர் நேற்று Manchester Arena என்ற இடத்தில் தன்னுடைய இசை நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்தார்.

திடீரென்று இரவு 10.30 மணியளவில் அந்த இடத்தில் வெடிகுண்டு வெடித்துள்ளது. வெடிகுண்டு சம்பவத்தால் இதுவரை 19 பேர் இறந்திருக்கிறார்கள் என்றும் 50 பேர் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குழந்தைகள் தங்களது பெற்றோர்களை இழந்து தவித்திருக்கின்றனர்.

தற்போது போலீசார் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதோடு இது தீவிரவாதிகளின் செயலா என்றும் விசாரணை நடத்தி வருகின்றனராம்.