Connect with us
Cinemapettai

Cinemapettai

salman-aishwarya-rai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

எப்பொழுதும் கவர்ச்சியான நடிகர் இந்த முரட்டு நடிகர்தானாம்.. கணவரை வெறியேத்தும் ஐஸ்வர்யா ராய்!

பாலிவுட்டில் மிக பிரபலமாக பேசப்பட்ட காதல் ஜோடிகளில் ஒருவர் தான் சல்மான் கான்-  ஐஸ்வர்யா ராய் ஜோடி. இவர்கள் இருவரும் சஞ்சய் லீலா பன்சாலியின் இயக்கத்தில் வெளியான ‘ஹம் தில் தே சுகே சனம்’ என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் காதல் வயப்பட்டனர்.

பின்னர் சில கருத்து வேறுபாட்டின் காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர்.

இந்நிலையில் ஐஸ்வர்யாராய் பேட்டி ஒன்றில், பாலிவுட் நடிகர்களில் சல்மான் கான் தான் மிகவும் அழகான மற்றும் கவர்ச்சியான தோற்றத்தைக் கொண்டவர் என கூறியிருப்பது வைரலாகி வருகிறது.

அதாவது ஐஸ்வர்யா ராய் அழகி பட்டம் பெற்ற பின் சிமி கரிவால் என்பவருக்கு பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார்.

அந்தப் பேட்டியில் சிமி ஐஸ்வர்யா ராயிடம், ‘பாலிவுட்டில் உள்ள நடிகர்களில் யார் கவர்ச்சியானவர் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு ஐஸ்வர்யா ராய் சற்றும் யோசிக்காமல், ‘சல்மான் கான் தான்’ என்று பதில் கூறி இருப்பதோடு, ‘அவர் அனைவரையும் ஈர்க்கும் முகத்தோற்றம் கொண்டவர்’ என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

அதற்குப்பிறகுதான் ஐஸ்வர்யாராய் சல்மான்கானுடன் இணைந்து சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் ‘ஹம் தில் தே சுகே சனம்’ படத்தில் நடித்தாராம்.

எனவே, இவ்வாறு ஐஸ்வர்யா ராய் தன்னுடைய முன்னாள் காதலனை பற்றி  பேசியிருக்கும் இந்த சுவாரஸ்யமான தகவல்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Continue Reading
To Top