Tamil Cinema News | சினிமா செய்திகள்
கைதியாக பாலிவுட்டை மிரட்டிய கார்த்தி.. ரீமேக்கில் நடிக்கும் பக்கா மாஸ் நடிகர்
கடந்த வருடம் தீபாவளிக்கு வெளியான பிகில் படத்திற்கு இணையாக வெற்றியைப் பெற்ற திரைப்படம் கைதி. கார்த்தியின் சினிமா கேரியரில் 100 கோடி வசூலை பெற்ற திரைப்படம். அது மட்டுமல்லாமல் தற்போது கைதி படத்தை பிற மொழிகளில் ரீமேக் செய்ய பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் படத்தின் தயாரிப்பாளரான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்ஆர் பிரபு கைதி படத்தை ரிலையன்ஸ் நிறுவனத்துடன் சேர்ந்து ஹிந்தியில் ரீமேக் செய்ய இருப்பதாக அறிவிப்பை வெளியிட்டார். அன்றிலிருந்து ஹிந்தியில் யார் ஹீரோவாக நடிக்கப் போகிறார் என்ற ஆர்வம் அனைவரிடமும் பற்றிக்கொண்டது.
சமீபத்தில் நடிகர் சல்மான்கான் கைதி படத்தில் நடிக்க ஆர்வம் காட்டியதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அதில் உண்மையில்லை. தற்போது கைதி படத்தை பல முன்னணி நடிகர்களிடமும் போட்டு காட்டி வருகின்றனர்.
பக்கமாக நடிகர் ரித்திக் ரோஷனிடம் கைதி படத்தை காட்டியதாகவும் அதில் ரித்திக் ரோஷன் நடிக்க ஆர்வமாக இருப்பதாகவும் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. மேலும் நீண்ட காலமாக வெற்றி கிடைக்காமல் தடுமாறும் ரித்திக் ரோஷனுக்கு இந்த படம் புதிய அனுபவத்தையும் பெரிய வெற்றியையும் தரும் என ரித்திக் ரோஷனின் நெருங்கிய வட்டாரங்கள் கூறியதால் விரைவில் இந்த படத்திற்கான வேலைகள் நடைபெறும் என தெரிகிறது.
இதற்கு முன்பு ரித்திக் ரோஷன் இதுபோன்ற எதார்த்தமான கதைகளில் நடித்ததில்லை என்பதாலேயே இந்த படத்தின் மீது தனக்கு ஆர்வம் அதிகமாக இருப்பதாக தனது வட்டாரங்களில் தெரிவித்துள்ளாராம்.
