Tamil Cinema News | சினிமா செய்திகள்
பாகுபலிக்கு முன்னதாகவே கமல்ஹாசன் செய்யவிருந்த சாதனை- ஆனால்?
உலகநாயகன் கமல்ஹாசன் இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் கலைஞன். இவர் எப்போதும் தன்னை அடுத்தக்கட்டத்துக்கு தயார்படுத்திக்கொண்டே இருப்பவர்.
இவரிடம் ஒரு பேட்டியில், விஸ்வரூபம் இரண்டாம் பாகத்தை எடுத்து வரும் நீங்கள் உங்களுடைய மற்ற எந்த படத்தை இரண்டாம் பாகம் எடுக்க விரும்புவீர்கள் என்று கொகுப்பாளர் கேட்டார்.
பதிலளித்த கமல், நான் பஞ்சதந்திரம், அன்பே சிவம் படங்களை படம் எடுக்கும்போதே இரண்டாம் பாகம் எடுக்க விரும்பினேன். ஆனால் தயாரிப்பு தரப்பில் நம்பாததால் ஒரு பாகத்திலேயே முடித்துக்கொண்டோம் என்றார்.
ஆனால் பாகுபலி படக்குழு முழுமையாக நம்பியதன் விளைவாகத்தான் இரண்டாம் பாகமும் வெளிவந்து வெற்றியும் பெற்றுள்ளது என்று கூறினார்.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
