Connect with us
Cinemapettai

Cinemapettai

sruthi haasan

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பாலிவுட்டில் ஸ்ருதி நடிக்கும் கதாபாத்திரம் என்ன தெரியுமா? லீக்கான தகவல்

பாலிவுட்டில் வித்யுத் ஜமாலுடன் ஸ்ருதி நடித்து வரும் படத்தில் அவருடைய கதாபாத்திரம் குறித்த புதிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

உலகநாயகனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன். தற்போது, கோலிவுட், டோலிவுட்டை தாண்டி பாலிவுட்டிலும் நடித்து வருகிறார். கலிபோர்னியாவில் உள்ள இசைக்கல்லூரியில் இசை கற்ற ஸ்ருதிஹாசன் பாடகியாக தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 6 வயதில் தேவர் மகன் படத்தில் தொடங்கிய அவர் திரைப்பயணம் தொடர்ந்து பல படத்தில் நீடித்தது. ஹேராம், என்மன வானில், வாரணம் ஆயிரம், லக் மற்றும் உன்னைப்போல் ஒருவன் ஆகிய படங்களிலும் பாடல்களை பாடியுள்ளார். நாயகியாக தொடர்ந்த இவர் பயணம் 2011இல் வேறு திசை நோக்கி திரும்பியது. சூர்யாவுடன் இணைந்து ஏழாம் அறிவு என்ற திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமாகினார்.

அப்படம் பெரும் ஹிட் அடித்தது ஸ்ருதியின் சினிமா வாழ்க்கையில் ஏறுமுகமாக அமைந்தது. பல ஊடகங்களும் ஸ்ருதியின் நடிப்பை வெகுவாக பாராட்டியது. தொடர்ந்து, தெலுங்கு, இந்தி படங்களிலும் வாய்ப்புகள் வர தொடங்கியது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான 3 படத்தில் ஸ்ருதியின் தமிழ் திரைப்பட பயணம் சரியான பாதையை நோக்கி பயணித்தது. ஸ்ருதி எல்லா வாய்ப்புகளுக்கு சட்டென ஓகே சொல்பவர் இல்லை. பல மணி நேரம் இது தனக்கு சரியாக வருமா என யோசித்த பிறகே முடிவு எடுப்பார்.

பிரம்மாண்ட படைப்பாக உருவாக இருக்கும் சங்கமித்ரா படத்தில் டைட்டில் ரோலில் ஸ்ருதிஹாசன் நடிக்க இருப்பதாக முதலில் அறிவிக்கப்பட்டது. பல மொழிகளில் தயாராக இருந்த இப்படத்திற்காக தனிப் பயிற்சியாளரை வைத்து வாள் சண்டை கூட கற்றுக் கொண்டார். ஆனால், திடீரென காரணம் அறிவிக்காமல் படத்தில் இருந்து விலகினார். அதன்பிறகு, எந்தப் படத்திலுமே ஸ்ருதி ஹாசன் ஒப்பந்தமாகவில்லை.

இந்நிலையில், மகேஷ் மஞ்ச்ரேகர் இயக்கும் பாலிவுட் படத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. துப்பாக்கி வில்லன் வித்யுத் ஜம்வால் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்து வருவதாக தெரிகிறது. இப்படத்தில் ஸ்ருதிக்கு இதுவரை இல்லாத லெவலில் கேங்ஸ்டர் வேடம் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மும்பையில் முடிந்த நிலையில், இரண்டாம்கட்ட படப்பிடிப்பு விரைவில் கோவாவில் தொடங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top