Tamil Cinema News | சினிமா செய்திகள்
அஜித்தை பார்த்து வெட்கப்படும் பாலிவுட் ஹீரோயின் வைரல் வீடியோ.. தல நீங்க வேற லெவல்!
தமிழ் சினிமாவில் எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் ஹீரோவாக வெற்றி நடை போட்டுக் கொண்டிருப்பவர் தான் தல அஜித். மேலும் தல அஜித் தமிழ் சினிமாவிற்கு பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.
அந்த வரிசையில் கடந்த 2002ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான வில்லன் படம் மாஸ் ஹிட்டானது. இந்தப் படத்திற்காக அஜித்துக்கு ஃபிலிம்ஃபேர் விருதும், கே எஸ் ரவிக்குமாருக்கு சிறந்த இயக்குனருக்கான விருதும் கிடைத்தது.
இந்த நிலையில் தற்போது பிரபல பாலிவுட் நடிகையான கரீனா கபூர் அஜித்தைப் பார்த்து வெட்கப்பட்டு சிரிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதாவது ‘வில்லன்’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு கரீனா கபூரும், அபிஷேக் பச்சனும் ஒரு ஹிந்திப் படத்தின் பாடல் காட்சிக்காக அதே லோகேஷனக்கு வந்துள்ளனர். மேலும் அங்கு தான் கரீனா கபூர் அஜித்தையும், கிரணையும் சந்தித்தாராம்.
அந்த சூட்டிங் ஸ்பாட்டில் ஒரு பாடல் காட்சிக்காக அஜித் நடனமாட, உடனே கரீனா வெட்கப்பட்டு சிரித்து இருக்கிறார். அந்தப் பாடல் காட்சிக்கு அபிஷேக் பச்சன் கட் சொல்லியிருக்கிறார்.
இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருவதோடு, வில்லன் படம் வெளியாகி 18 வருடங்கள் ஆனதால் #18yearsofmegaBBVillan என்பதை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர் அஜித் ரசிகர்கள்.

ajith-shalini-cinemapettai
