Tamil Cinema News | சினிமா செய்திகள்
பாலிவுட்டை கட்டம் கட்டும் நெட்டிசன்கள்… ஏன் எதற்கு தெரியுமா?
பழைய ஆட்சியில் வரிந்து கட்டுக்கொண்டு விமர்சித்த பாலிவுட் பிரபலங்களின் பழைய ட்வீட்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் ப்ரகாஷ் ராஜ். தமிழில் மட்டுமல்லாது பல மொழிகளிலும் நடித்து புகழ்பெற்றவர். ஆனால், பாலிவுட்டில் தற்போது நடிப்பது இல்லை. இதுகுறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது, மோடியை விமர்சித்ததால் தனக்கு பாலிவுட்டில் வாய்ப்புகள் மறுக்கப்படுவதாக தெரிவித்து இருந்தார். தனக்கு தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய திரையுலகம் மட்டுமே தற்போது வாய்ப்பு தருவதாகவும், பாலிவுட் இல்லாமல் என்னால் வாழ முடியும். நான் ஏழை எல்லாம் இல்லை. சம்பாரித்துள்ளேன். இனியும் சம்பாரிப்பேன். ஆனால், பாஜகவை வீழ்த்துவதே என் லட்சியம் எனக் குறிப்பிட்டு இருந்தார். இத்தகவல் பெரும் வைரலாக பரவியது. ஒரு கட்சிக்காக வாய்ப்பு இல்லாமல் போகும் என பலரும் கிசுகிசுத்தனர். ஆனால் தற்போது பிரகாஷ் ராஜின் கூற்றை உறுதி செய்யும்படி ஒரு விவகாரம் நடந்துள்ளது.
இந்திய அளவில் பெட்ரோல் விலை ஏற்றத்துடன் காணப்படுகிறது. இதே நிலை, 2012ல் நிலவிய போது, மீண்டும் பெட்ரோல் விலை உயரப்போகிறது என்று தெரிகிறது. அதனால் அனைவரும் தங்களின் சைக்கிளை சுத்தம் செய்யுங்கள் என்று பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் ட்வீட்டி இருந்தார். ஆனால், அப்போது ஆட்சியில் இருந்தது காங்கிரஸ். தற்போது இந்த ட்வீட்டை எடுத்து நெட்டிசன்கள் வைரலாக்கி வருகிறார்கள். இதை பார்த்த அக்ஷய் அந்த ட்வீட்டையே நீக்கி விட்டார். ஒரு வேளை அரசுக்கு எதிராக இருக்கிறோம் என யாரும் விமர்சித்து விடுவார்களோ என நீக்கி விட்டாரா என தெரியவில்லை.
இதேபோல், கடந்த ஆட்சியில் கொக்கரித்த அனைத்து பிரபலங்களுமே தங்களின் கருத்தை இப்போதெல்லாம் சொல்வதே இல்லை. நமக்கு எதுக்கு வம்பு என அமைதியாகவே இருக்கிறார்கள். இதனால், பழைய ஆட்சியை விமர்சித்த பிரபலங்களின் ட்வீட்டை ரசிகர்கள் கண்டுபிடித்து, மீண்டும் இணையத்தில் ட்ரெண்டாக்கி வருகிறார்கள். அப்போது சொன்ன கருத்தெல்லாம் இப்போது எங்கே போயிற்று என கேள்வி வேறு அவர்களை கேட்டு வருவது பாலிவுட் பிரபலங்களுக்கு புது தலைவலியாக அமைந்து இருக்கிறது.
அட சொல்லுங்கப்பா! என்ன ஆச்சு!
