விஜய்யின் தீவிர ரசிகர்களான 7 பாலிவுட் நடிகர்கள்.. அதிலும் இவர் வெறித்தனமான ரசிகன்

தளபதி விஜய்க்கு தமிழ் சினிமாவை தாண்டி மற்ற மொழிகளிலும் அதிக ரசிகர்கள் உண்டு. மேலும் பாலிவுட்டில் முன்னணி நடிகர், நடிகைகளும் நான் விஜய் ரசிகர்கள் என பல பேட்டிகளில் கூறியுள்ளனர். அவ்வாறு விஜய் மொழிகளைத் தாண்டி பலரையும் கவர்ந்துள்ளார். அவ்வாறு விஜயின் தீவிர ரசிகர்களான பாலிவுட் பிரபலங்களை பார்க்கலாம்.

ஷாருக்கான் : பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் பல மேடைகளில் விஜயுடன் இணைந்து நடனம் ஆடியுள்ளார். விஜய்யின் ஆஸ்தான இயக்குனரான அட்லீ தற்போது ஷாருக்கானை வைத்து பாலிவுட்டில் படம் இயக்கி வருகிறார். இந்நிலையில் பீஸ்ட் படத்தின் டிரைலரை பார்த்து விட்டு, அட்லீயைப் போல் நானும் விஜய் ரசிகன் என ஷாருக்கான் கூறியிருந்தார்.

ஹிரித்திக் ரோஷன் : பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஹிரித்திக் ரோஷன். இவருடைய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும். இவருடைய நடனத்தால் பல ரசிகர்களை பெற்றுள்ளார். ஆனால் விஜய்யின் நடனத்திற்கு நான் மிகப்பெரிய ரசிகன் என ஒரு பேட்டியில் ஹிரித்திக் ரோஷன் கூறியிருந்தார்.

பிரியங்கா சோப்ரா : தமிழ் சினிமாவின் விஜயுடன் இணைந்து தமிழன் படத்தில் நடித்தவர் நடிகை பிரியங்கா சோப்ரா. அதன் பிறகு விஜய்யுடன் இணைந்து விளம்பரங்களில் நடித்துள்ளார். விஜயுடன் நடித்ததன் மூலம் பல விஷயங்களை கற்றுக் கொண்டதாகவும் அதை பாலிவுட் படங்களிலும் செயல்படுத்தி வருவதாக பிரியங்கா சோப்ரா கூறியிருந்தார்.

ஷாஹித் கபூர் : பாலிவுட்டில் பிரபல நடிகராக உள்ளவர் ஷாஹித் கபூர். தற்போது இவர் கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுத்துள்ள ஜெர்ஸி படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் நான் விஜய்யின் தீவிர ரசிகன் என ஷாஹித் கபூர் கூறியுள்ளார். இவருடைய ஜெர்ஸி படம் விஜய்யின் பீஸ்ட் படத்திற்கு போட்டியாக வெளியாகயுள்ளது.

கத்ரீனா கைஃப் : பாலிவுட்டில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவர்தான் கத்ரீனா கைஃப். இவர் பிரபல நிறுவனங்களின் விளம்பரங்களில் நடித்துள்ளார். அதில் விஜய்யுடன் இணைந்த கத்ரீனா கைஃப் சில விளம்பரங்களில் நடித்துள்ளார். இந்நிலை ஒரு பேட்டி ஒன்றில் விஜய் எனக்கு பிடித்த நடிகர் என்றும் அதிகம் பேச மாட்டார் என குறிப்பிட்டுள்ளார்.

ஜாக்கி ஷ்ரோப் : அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் வில்லனாக நடித்தவர் பாலிவுட் ஜாக்கி ஷ்ரோப். இப்படத்தில் விஜய்யின் நடிப்பை பார்த்த ஜாக்கி ஷ்ரோப் அசந்துயுள்ளார். மேலும், நான் பார்த்ததிலேயே விஜய் ஒரு சிறந்த நடிகர் என ஜாக்கி ஷ்ரோப் கூறியுள்ளார்.

வருண் தவான் : பீஸ்ட் படத்தின் இந்தி டிரெய்லரை பாலிவுட் நடிகர் வருண் தவான் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். அதில் பீஸ்ட் படத்தின் ஹிந்தி ட்ரெய்லரை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி, நான் எப்போதுமே விஜய் சாரின் தீவிர ரசிகன் என குறிப்பிட்டிருந்தார். மேலும், விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்தின் ஹிந்தி ரீமேக்கில் வருண் தவான் நடிக்கிறார்.

Next Story

- Advertisement -