News | செய்திகள்
விஜய்சேதுபதி படத்தில் ‘பாலிவுட் பாட்ஷா’ கனெக்ஷன்..!!!
விக்ரம் வேதா திரைப்படத்துக்குப் பிறகு விஜய் சேதுபதி தற்போது, `ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். அது மாத்திரமல்லாது, `சீதக்காதி’, `சயீரா நரசிம்ம ரெட்டி’, `மா மனிதன்’ உள்ளிட்ட படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
ஒரு படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் கூட்டணியை வைத்தே அப்படத்தின் வணிக பலம் நிர்ணயிக்கப்படுகிறது. பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தும் படங்களே வணிக பலம் பெறும் படங்களாக இருக்கும்.

vijaysethupathy
அந்த வகையில் விஜய் சேதுபதி மற்றும் கவுதம் கார்த்திக் நடிக்கும் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது.
இப்படத்தை ஆறுமுக குமார் இயக்கி வருகிறார். ‘7c’s Entertainment Private Limited’ தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை ‘Amme Narayana Entertainment’ ரிலீஸ் செய்யவுள்ளது.
மேலும் விஜய்சேதுபதி நடித்த ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் சேதுபதி – இயக்குநர் கோகுல் கைகோர்த்துள்ள படம் ‘ஜுங்கா’.

vijaysethupathy
‘IABK’ சூப்பர் ஹிட் என்பதால் இந்த படத்தின் அறிவிப்பு வந்த நாளிலிருந்தே ரசிகர்களின் எக்ஸ்பெக்டேஷன் லெவல் உச்சத்தில் உள்ளது.
இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ‘வனமகன்’ புகழ் சாயீஷா டூயட் பாடி ஆடி வருகிறார். மேலும், முக்கிய வேடத்தில் யோகி பாபு நடிக்கிறார்.
சித்தார்த் விபின் இசையமைக்கும் இதனை விஜய் சேதுபதியே தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ்’ மூலம் தயாரிக்கிறாராம்.
சமீபத்தில், இதன் ஷூட்டிங் பாரீஸில் துவங்கி பரபரப்பாக நடைபெற்று வந்தது. மக்கள் செல்வனின் வித்தியாசமான லுக் ஸ்டில்ஸ் சமூக வலைதளங்களில் வைரலானது.

vijay sethupathy
இதனைத் தொடர்ந்து பல்கேரியா மற்றும் ஆஸ்ட்ரியாவிற்கு செல்லவிருக்கிறது படக்குழு. அங்கு 3 பாடல் காட்சிகளை படமாக்க திட்டமிட்டுள்ளனராம்.
தற்போது, இதற்கு டட்லி என்பவர் ஒளிப்பதிவு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் ‘பாலிவுட் பாட்ஷா’ ஷாருக்கானின் ‘சென்னை எக்ஸ்ப்ரெஸ், தில்வாலே’ போன்ற ஹிந்தி படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. ‘ஜுங்கா’வின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸ் செய்யவுள்ளனராம்.
