Tamil Cinema News | சினிமா செய்திகள்
இலியானா.. யாமி கௌதம்.. அஜித்தின் வலிமை படத்தில் நடிக்க போவது யார்?
அஜித்தின் வலிமை படத்தில் கதாநாயகி வேடத்தில் இலியானா அல்லது யாமி கௌதம் ஆகிய இருவரில் யாரோ ஒருவர் நடிக்கப்போது உறுதியாகி உள்ளது.
அஜித் அடுத்தாக நடிக்க உள்ள படம் வலிமை. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கப் போது யார் என்பது குறித்து தான் இப்போது கோலிவுட்டில் ஹாட் டாபிக்காக ஓடிக்கொண்டிருக்கிறது.
விஜய்யின் நண்பன் படத்தில் நடித்து அப்படியே அக்கடதேசம் போய், பாலிவுட்டில் செட்டில் ஆன இலியானா, அஜித்துக்கு ஜோடியாக நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
முன்னதாக பாலிவுட் நடிகை யாமி கௌதம் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கப்போவதாகவும் சில நாட்களுக்கு முன்பு தகவல்கள் பரவியது. மேலும் நயன்தாரா அல்லது நஸ்ரியா நடிக்கப்போவதாகவும் தகவல் பரவியது. ஆனால் இதை எதையுமே வலிமை படத்தைதயாரிக்கும் போனி கபூர் உறுதி செய்யவில்லை.
வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் வலிமை படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார், நிரோஷா ஒளிப்பதிவு செய்கிறார் என்பதை மட்டும் போனி கபூர் உறுதி செய்துள்ளார். வலிமை படம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு திரைக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.
