Connect with us
Cinemapettai

Cinemapettai

amala-paul-aadai-teaser

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அமலா பாலின் முதல் கணவரை புகழ்ந்து தள்ளிய பாலிவுட் நடிகை! ஆடிப்போன கோலிவுட்!

தமிழ் சினிமாவிற்கு ‘தாம் தூம்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத். தற்போது கோலிவுட்டின் பிரபல இயக்குனர் ஏஎல் விஜய் இயக்கத்தில் உருவாகிக்கொண்டிருக்கும், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்படும் ‘தலைவி’ படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரனாவத் நடித்துக்கொண்டிருக்கிறார்.

இதில் எம்ஜிஆர் வேடத்தில் அரவிந்த்சாமி நடிக்கிறார். மேலும் இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் ரெடியாகி வருகிறது. விப்ரி நிறுவனம் சார்பில் விஷ்ணு இந்தூரி தயாரித்து, ஜிவி பிரகாஷ் இசையமைத்துக் கொண்டிருக்கிறார்.

எனவே இந்தப்படத்தில் முதல் பகுதிக்கான டப்பிங் வேலைகள் நிறைவடைந்த நிலையில், இரண்டாம் பகுதியின் டப்பிங் இன்னும் இருக்கிறது.  இந்நிலையில் படத்தின் கதாநாயகியான கங்கனா ரனாவத், இயக்குனர் ஏஎல் விஜய்யை மனதார பாராட்டும் பதிவு ஒன்றை ட்விட் செய்துள்ளார்.

Thalaivi-cinemapettai

அதில், ‘கூடிய விரைவில் தலைவி படத்திற்கான பயணம் முடிவடைய உள்ள நிலையில், உங்களுடன் பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது. ஒரு கலைஞனாக இருக்கும்போது மட்டும் உங்களுடைய கண்கள் பிரகாசமாக இருப்பதில்லை.

kangana-ranaut-twit

மாறாக ஏற்றத்தாழ்வுகளை சந்திக்கும் போதும் உங்கள் கண்கள் பிரகாசமாக ஜொலிக்கிறது. எனவே உங்களின் கோபம், பாதுகாப்பின்மை, விரட்டி ஆகியவற்றிற்கான அறிகுறியை பார்க்கமுடிகிறது. மேலும் தலைமுறை தலைமுறையாக பணியாற்றியவர்கள் உங்களைப் பற்றிப் பெருமையாகப் பேசும் பொழுது அவர்களின் கண்கள் ஒலிக்கிறது.

kangana-twit

இதை எல்லாம் வைத்து பார்க்கும்போது, நீங்கள் சாதாரண மனிதர் அல்ல. எனது ஆழ்மனதில் இருந்து உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். இந்த படத்திற்கு பிறகு நான் உங்களை மிஸ் செய்வேன்’ என்று கங்கனா ரனாவத் அதில் குறிப்பிட்டுள்ளார்.

எனவே பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், இயக்குனர் ஏஎல் விஜய்யை புகழ்ந்து தள்ளிய ட்விட்டர் பதிவை பார்த்த கோலிவுட்டே ஆடிப் போய் விட்டது.

Continue Reading
To Top