Tamil Cinema News | சினிமா செய்திகள்
நான் விஜய் ரசிகை.. வெளிப்படையாக அறிவித்த பிரபல நடிகை.. மாஸ் தளபதி
தளபதி விஜய் குறித்து பரபரப்பாக செய்திகள் ஓடிக்கொண்டிருக்கிறது. அவர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதுடன் . நெய்வேலியில் மாஸ்டர் சூட்டிங்கில் இருந்த விஜய்யிடம் பல மணி நேரம் விசாரணை நடத்தினர்.
ஆனால் வருமான வரித்துறை விஜய்யிடம் இருந்து ஒரு ரூபாய் கூட கைப்பற்றவில்லை. இதன் மூலம் அவர் வருமான வரித்துறையை ஏமாற்றவில்லை என்பது தெளிவாகிறது.
இந்நிலையில் என்னை நோக்கி பாயும் தோட்டா உள்பட பல படங்களில் நடித்துள்ள நடிகை மேகா ஆகாஷ் தற்போது பாலிவுட் படத்தில் நடித்தார்.

m-akash
இது ரிலீஸ்க்காக காத்திருக்கிறது, அவரிடம் செய்தியாளர் ஒருவர் நீங்க மகேஷ் பாபு ரசிகையா என்று கேள்வி கேட்டார். அதற்கு மேகா ஆகாஷ், இல்லை, நான் தளபதி விஜய் ரசிகை என்று உடனே பதில் அளித்துள்ளார்.
அதற்கு செய்தியாளர், இப்படி குறிப்பிட்ட நடிகரின் ரசிகர் என்று நேரடியாக சொல்வது உங்கள் எதிர்காலத்தை பாதிக்காதா என்ற கேட்டதற்கு, அதை பற்றி எனக்கு கவலை இல்லை, இந்த விஷயத்தில் எப்படி நான் பொய் செல்ல முடியும் என சட்டென பதில் அளித்துள்ளார்.
இந்த அழகு குயில், யாதும் ஊரே யாவும் கேளீர் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
