விஜய்க்காக மல்லுக்கட்டும் 2 பாலிவுட் நடிகைகள்.. ரேஸில் முந்த போவது யார்?

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது. இதனால் விஜய்யின் ரசிகர்கள் இப்படத்தை எதிர்நோக்கி ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் விஜய் அடுத்ததாக நடிக்கப்போகும் தளபதி 66 திரைப்படத்தைப் பற்றிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

பீஸ்ட் திரைப்படத்திற்கு பிறகு விஜய் தமிழ் மற்றும் தெலுங்கு இருமொழிகளில் உருவாகும் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தை வம்சி இயக்க தில் ராஜு தயாரிக்கிறார். விரைவில் தொடங்க இருக்கும் இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது.

மேலும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க இருப்பதாகவும் ஒரு தகவல் வெளியானது. இந்நிலையில் படக்குழு விஜய்க்கு ஜோடியாக நடிக்க பிரபல பாலிவுட் ஹீரோயின்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது.

ஹிந்தியில் பிரபல நடிகைகளாக இருக்கும் கீர்த்தி சனோன் மற்றும் திஷா பதானி ஆகியோர் தளபதி 66 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க போட்டியிட்டு வருகின்றனர். இவர்களில் ஒருவர் தான் அவருக்கு ஜோடியாக தேர்வு செய்யப்படுவார் என்று தெரிகிறது.

முன்னணி நடிகராக இருக்கும் விஜய்க்கு ஜோடியாக ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும் என்று அனைத்து மொழிகளில் இருக்கும் பிரபல நடிகைகள் அனைவரும் போட்டியிட்டு வருகின்றனர். மேலும் சில நடிகைகள் வெளிப்படையாக தங்கள் ஆசையை தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் சமீபகாலமாக இந்த வாய்ப்பு பிரபல பாலிவுட் நடிகைகளுக்கு தான் சென்றுக்கொண்டு இருக்கிறது. அந்த வகையில் விஜய் தற்போது நடித்து இருக்கும் பீஸ்ட் படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அதைத்தொடர்ந்து மேலும் ஒரு பாலிவுட் இளம் ஹீரோயின் விஜய்க்கு ஜோடியாக தமிழில் அறிமுகமாக இருக்கிறார்.