fbpx
Connect with us

விஜய் பட நடிகைக்கு நடந்த விபரீதம்.. பலாத்காரம் செய்து கொன்று விடுவார்களோ என பயந்து ஓட்டம்!

vijay-corona

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜய் பட நடிகைக்கு நடந்த விபரீதம்.. பலாத்காரம் செய்து கொன்று விடுவார்களோ என பயந்து ஓட்டம்!

பீகார் தேர்தலில் போட்டியிடும் லோக் ஜனசக்தி கட்சியை சேர்ந்த பிரகாஷ் சந்திராவுக்கு ஆதரவாக பாலிவுட் நடிகை அமீஷா பட்டேல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு மும்பை திரும்பிய அவர் பிரகாஷ் சந்திரவால் தனக்கு நேர்ந்த கொடுமைகளைப் பற்றி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

பிரச்சாரத்தின் போது பிரகாஷ் சந்திரா தன்னை அடிமை போல் நடத்தினார் என்றும், பிரச்சாரம் செய்யும் போது பயமாக இருந்தது, மேலும் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து, கொன்றுவிடுவார்களோ என்று பயந்தேன் எனவும் கூறினார்.

இதுமட்டுமின்றி தன்னுயிரை காப்பாற்றிக் கொள்ள அவர்கள் சொல்வதை எல்லாம் கேட்க நேரிட்டது என்று கூறினார்.

மேலும் பிரகாஷ் சந்திரா தன்னை மிரட்டியதாகவும், தவறாக நடந்து கொண்டதாகவும், தன்னைப்பற்றி பெருமையாக பேச வேண்டுமென்றும் மெசேஜ் அனுப்பினார், என்று அமீஷா பட்டேல் வெளிப்படையாகதெரிவித்துள்ளார்.

தன் காரை சுற்றி பிரகாச அடியார்களை நிறுத்தியதாகவும், பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு மும்பைக்கு திரும்பி வருவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது என்று தெரிவித்துள்ளார்.

அமீஷா பட்டேலுக்கு தற்போது மார்க்கெட் இல்லை, அவர் தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் மார்க்கெட் இல்லாத ஒரு நடிகையை பிரச்சாரத்திற்கு அழைத்துச் சென்று அவரை ஏன் மிரட்ட வேண்டும் என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

amisha-patel

amisha-patel

Continue Reading
To Top