மலரே என்ற ஒரு பாடல் போதும் அது என்ன படம், யார் யார் நடித்தார்கள் என்று எல்லா விஷயத்தையும் புட்டுபுட்டு வைப்பார்கள் இன்றைய கால ரசிகர்கள்.

ஏனெனில் இந்த படம் அந்த அளவுக்கு ரசிகர்களின் மனதில் ஒரு பெரிய இடத்தை பிடித்திருக்கிறது. படத்தினால் மிகவும் பிரபலமானவர் சாய் பல்லவி (மலர் டீச்சர்).

அண்மையில் இப்படத்தில் இடம்பெற்ற மலரே பாடலை பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குர்ரானா கேட்டிருக்கிறார். பாடலை கேட்டு மயங்கிய அவர் சாய் பல்லவியை டுவிட்டரில் புகழ்ந்து தள்ளியுள்ளார். உடனே சாய் பல்லவியும் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.