விஜய் 67ல் அசுர வில்லனுடன் மோதப்போகும் தளபதி.. 7 அடி உயர ராட்சஸன் ஆச்சே

தளபதி விஜய் தற்போது பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார். வம்சி இயக்கத்தில் தில் ராஜூ தயாரிக்கும் இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். அதைத்தொடர்ந்து முக்கிய கதாபாத்திரங்களில் சரத்குமார், ஷியாம் ஆகியோர் ஒப்பந்தமாகி இருக்கின்றனர்.

தற்போது விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வரும் இந்தப் படத்தின் ஷூட்டிங்கை விரைந்து முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. தமன் இசையமைத்து வரும் இந்தப் படத்தில் ஆக்ஷன், ரொமான்ஸ், சென்டிமென்ட் போன்ற அனைத்தும் ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் இருக்குமாம். அதனால் இந்த படத்தின் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருக்கிறது.

இந்த படத்திற்கு பிறகு விஜய் தன்னுடைய 67வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இப்போது கமலின் விக்ரம் திரைப்படத்தை இயக்கி முடித்திருக்கும் லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்க இருக்கிறார். இவர்களின் கூட்டணியில் ஏற்கனவே வெளிவந்த மாஸ்டர் திரைப்படம் பல கோடி வசூல் சாதனை படைத்தது.

அதை தொடர்ந்து இந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் களம் இறங்குகிறது. இந்த படத்தை 7 கிரீன்ஸ் ஸ்டுடியோ சார்பில் லலித் குமார் தயாரிக்க இருக்கிறார். இதில் விஜய்க்கு வில்லனாக நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

இவர் வில்லனாக மிரட்டிய கே ஜி எஃப் 2 திரைப்படம் தற்போது திரையரங்குகளில் சக்கைபோடு போட்டு வருகிறது. அதனால் அவரை விஜய்க்கு வில்லனாக நடிக்க வைக்க படக்குழு பேசி வருகிறது. இதற்கு சஞ்சய் தத்தும் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

அதனால் கூடிய விரைவில் இந்த படம் தொடர்பான அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தின் ஷூட்டிங் வரும் அக்டோபர் மாதம் ஆரம்பிக்க இருப்பதால் லோகேஷ் கனகராஜ் தற்போது அதற்கான வேலைகளில் பிஸியாக இருக்கிறார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்