‘ரோமியோ ஜூலியட்’ வெற்றியை தொடர்ந்து ஜெயம் ரவி, ஹன்சிகா ஜோடி மீண்டும் இணைந்திருக்கும் படம் ‘போகன்’. இயக்குநரும் நடிகருமான பிரபுதேவா தயாரிப்பில் லக்ஷ்மண் இயக்கிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மார்ச் மாதம் தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வருகிற ஜூன் 9ஆம் தேதி வெளிவரவிருப்பதாக நடிகை ஹன்சிகா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றிருக்கிறார். இமான் இசையமைத்திருக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவை ‘ரோமியோ ஜூலியட்’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்த சௌந்தரராஜன் மேற்கொள்கிறார்.

மேலும் இப்படத்தில் அர்விந்த்சாமியும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார். சமீபத்தில் போலீஸ் யூனிஃபார்மில் ஜெயம் ரவி, அர்விந்த்சாமியும் இருக்கும் ‘போகன்’ புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியது குறிப்பிடத்தக்கது.