பிக்பாஸ் பிரபலத்தின் தந்தை மரணம்.. சோகத்தில் ரசிகர்கள்

விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸில் கலந்து கொண்ட முகன் டைட்டில் வின்னர் ஆகும் அறிவிக்கப்பட்டார்.  இவரது தந்தை நேற்றைய தினம் மாரடைப்பால் மரணமடைந்த செய்தியை கேட்டு ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

முகன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது ஒரு வாரம் கூட தாக்குப்பிடிக்க மாட்டார்கள் என்று வேடிக்கையாக பேசினார்கள் ஆனால் கடைசிவரை இருந்து டைட்டில் வின்னர் ஆனார்.

முகன் தந்தை ஒரு நல்ல பாடகர் என்பதால் தன் மகனையும் அதேபோல் பாட வைத்து உலகுக்கு அறிமுகப்படுத்தினார். நேற்றைய தினம் திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு சென்ற பின் சிகிச்சை பலனின்றி  மாரடைப்பினால் உயிரிழந்தார்.

தற்போது தீராத துக்கத்தில் இருக்கும் முகனுக்கு சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.

mugan
mugan

Leave a Comment