ஜீவன், சோனியா அகர்வால், அப்பாஸ், மாளவிகா நடித்த ‘திருட்டுப்பயலே’ திரைப்படத்தை இயக்குனர் சுசிகணேசன் இயக்கியிருந்தார். இந்த படம் நல்ல வசூலை பெற்று வெற்றிபடமாகிய நிலையில் 10 ஆண்டுகள் கழித்து தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க சுசிகணேசன் முடிவு செய்துள்ளார். 2009ஆம் ஆண்டு விக்ரம் நடித்த ‘கந்தசாமி’ படத்தை அடுத்து 7 வருட இடைவெளிக்கு பின்னர் சுசிகணேசன் மீண்டும் இந்த படத்தின் மூலம் ரீஎண்ட்ரி ஆகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘திருட்டுப்பயலே’ இரண்டாம் பாகத்தில் நெகட்டிவ் ஹீரோவாக பாபிசிம்ஹாவும், வில்லனாக பிரசன்னாவும் நடிக்கவுள்ளனர். முதல் பாகத்தில் இந்த வேடங்களில் ஜீவன் மற்றும் அப்பாஸ் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தை முதல் பாகத்தை தயாரித்த ஏஜிஎஸ். நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் இந்த படத்தின் நாயகி தேர்வு நடைபெற்று வருவதாகவும், இந்த படம் வரும் செப்டம்பர் முதல் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.