Connect with us
Cinemapettai

Cinemapettai

Videos | வீடியோக்கள்

நந்தா சூர்யா கெட்டப்பில் மிரள விட்ட பாபி சிம்ஹா.. எதிர்பார்ப்பை எகிற வைத்த பிருந்தா மாஸ்டரின் தக்ஸ் ட்ரெய்லர்

பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் உருவாகியுள்ள தக்ஸ் படத்தில் நந்தா சூர்யா கெட்டப்பில் பாபி சிம்ஹா மிரட்டி உள்ளார்.

நடன இயக்குனரான பிருந்தா மாஸ்டர் ஹேய் சினாமிகா என்ற படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார். இந்த படம் இளைஞர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் இப்போது தக்ஸ் என்ற படத்தை எடுத்துள்ளார். அண்மையில் இந்தப் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு பெற்றுள்ளது.

தக்ஸ் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னட மொழிகளில் உருவாகியுள்ளது. இந்த படத்தில் பாலிவுட் நடிகர் ஹிர்ருது ஹாரூன் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் பாபி சிம்ஹா நந்தா படத்தில் சூர்யா கெட்டப் போல தக்ஸ் படத்தில் மிரள விட்டுள்ளார். போலீஸ் அதிகாரியாக வில்லன் கதாபாத்திரத்தில் ஆர் கே சுரேஷ் நடித்துள்ளார்.

Also Read : ரோலக்ஸ் சூர்யாவைப் போல் ஆக்ஷன் கிங் அர்ஜுன்.. தளபதி 67-ல் முரட்டு மீசையுடன் வைரல் புகைப்படம்

இவர்களைத் தவிர அனஸ்வரா ராஜன், ரம்யா சங்கர், முனிஸ்காந்த் மற்றும் பல பிரபலங்கள் நடித்துள்ளார்கள். இந்தப் படத்தில் பெரும்பாலான காட்சிகள் ஜெயிலில் படமாக்கப்பட்டுள்ளது. மேலும் ஆங்காங்கே காதல் காட்சிகளிலும், அதிகமாக ஆக்சன் காட்சிகளும் நிறைந்து இருக்கிறது.

அதுவும் ஜெயில் அதிகாரியாக இருக்கும் ஆர்கே சுரேஷால் ஹீரோவே படாத பாடு படுத்துகிறார். ஆகையால் சிறைக்குள் கைதிகளுக்கு நடக்கும் அநீதிகளையும் இந்தப் படம் வெட்ட வெளிச்சமாக காட்ட உள்ளது .மேலும் இந்த படம் மலையாள படத்தின் ரீமேக் என்றாலும் பிருந்தா மாஸ்டர் தன்னுடைய இயக்கத்தால் படத்திற்கு வலு சேர்த்து உள்ளார்.

Also Read : ஜிகர்தண்டா 2 படத்தில் பாபி சிம்ஹாவுடன் இணையும் பிரபலம்.. 150 கோடியை குறிவைத்த கார்த்திக் சுப்புராஜ்

பாபி சிம்ஹாவுக்கு ஜிகர்தண்டா படத்திற்கு பிறகு சொல்லிக் கொள்ளும் அளவிற்கு எந்த கதாபாத்திரமும் பெயர் வாங்கி தரவில்லை. தக்ஸ் படத்தில் அவரது கதாபாத்திரம் ரசிகர்களால் பெரிய அளவில் பேசப்படும் என்று கூறப்படுகிறது. இந்த அளவுக்கு ட்ரெய்லரிலேயே மிரள விட்டுள்ளார்.

மேலும் தக்ஸ் ட்ரைலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரிக்கச் செய்துள்ளதால் படத்தைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். ஆகையால் விரைவில் படத்தைப் பற்றிய அடுத்த அடுத்த அப்டேட் மற்றும் ரிலீஸ் தேதி வெளியாக என எதிர்பார்க்கலாம்.

Also Read : அசால்ட் சேது கேரக்டருக்கு பாபி சிம்ஹா முதல் சாய்ஸ் இல்லையாம்.. தேசிய விருதை விட்டுக் கொடுத்த நடிகர்

Continue Reading
To Top