fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

வைரலாகுது பாபி சிம்ஹா நடிப்பில் செம்ம திரில்லர்.. வசந்த முல்லை டீசர்

Videos | வீடியோக்கள்

வைரலாகுது பாபி சிம்ஹா நடிப்பில் செம்ம திரில்லர்.. வசந்த முல்லை டீசர்

குறும்படங்களில் நடித்து, பின்பு வெள்ளித்திரையில் நுழைந்தவர் பாபி சிம்ஹா. தமிழ் சினிமாவில் அற்புதமான தொடக்கத்தை குடுத்துவிட்டு அடுத்தடுத்த வெற்றிகளுக்காக போராடி கொண்டிருப்பவர் என்று தான் சொல்ல வேண்டும்.

ஜிகர்தண்டா ஏற்படுத்தி கொடுத்த வரவேற்பு காரணமாக தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் தற்பொழுது நடித்து வருகிறார். பல படங்களில் வில்லன் வேடம் தான்.

வசந்த முல்லை படத்தில் ஹீரோவாக சிம்ஹா நடித்துள்ளார். இந்தப் படத்தை ரமணன் புருஷோத்தமா இயக்கி உள்ளார். குறும்படங்கள் இயக்கியுள்ள இவர் இயக்கும் முதல் படம். தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கில் ரெடியாகிறது. கதாநாயகியாகக் காஷ்மீரா பர்தேஷி நடித்து உள்ளார்.

ராஜேஷ் முருகேசன் இசையமைக்கிறார். கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்கிறார். விவேக் ஹர்ஷன் எடிட்டிங் செய்கிறார். எஸ்.ஆர்.டி எண்டர்டையின்மெண்ட் மற்றும் முத்ராஸ் பிலிம் ஃபேக்டரி இணைந்து தயாரித்து உள்ளனர்.

சமீபத்தில் இப்படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சைக்கலாஜிக்கல் படமா அல்லது ஆக்ஷன் திரில்லர்  எந்த ஜானர் என யூகிக்க  முடியவில்லை.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top