‘வல்லவனுக்கும் வல்லவன்’ என்ற படத்தை தயாரித்தும் நடித்தும் வரும் பாபி சிம்ஹா தற்போது 2001-ஆம் ஆண்டு வெளிவந்த ‘சிட்டிசன்’ படத்தில் அஜித் பல கெட்டப்புகளில் நடித்து அசத்திய மாதிரி ‘வல்லவனுக்கும் வல்லவன்’ படத்தில் பாபி சிம்ஹா பதினொரு கெட்டப்புகளில் நடித்து கலக்கியுள்ளாராம்.

மேலும்‘சிட்டிசன்’ படம் படமாக்கப்பட்ட பழவேற்காடு ஏரியில் தான் ‘வல்லவனுக்கும் வல்லவன்’ படமும் படமாக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி வேலைகள் நடந்து வருகிறது. இப்படத்தின் டீசர் ஆகஸ்ட் 2-ந் தேதி வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.