பூளு வேல் என்ற ஆன்லைன் விளையாட்டு உலகம் முழுவதும் பலரது உயிரை பறித்தது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலான சிறுவர்கள் இதனால் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் சோகத்தில் ஆழ்த்தியது. இந்தியாவிலும் சிறுவர்கள் தற்கொலை செய்துக்கொண்ட கோர சம்பவம் நடைப்பெற்றது.

இந்நிலையில் இந்த விளையாட்டை கடந்த 1 வருடமாக கூகுளில் அதிகம் தேடிய நாடுகளின் பட்டியலில் இந்தியா தொடர்ந்து மூன்றாவது இடத்தில் உள்ளது. அதில் சென்னை உள்பட ஐந்து இந்திய நகரங்கள் இடம்பெற்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் படித்தவை:  தளபதி விஜயை தாறுமாறாக புகழ்ந்த பிரபலங்கள்.!

கூகுளில் புளூ வேல் சார்ந்த தேடலில் உலகளவில் கொல்கத்தா முதலிடம் பிடித்துள்ளது. அதைத்தொடர்ந்து சான் அண்டொனியோ, நைரோபி, கவுகாத்தி, சென்னை, பெங்களூரு, மும்பை, டெல்லி, ஹவுரா, பாரிஸ் உள்ளிட்ட நகரங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.

அதிகம் படித்தவை:  மலையாள சூப்பர்ஸ்டாருடன் இணைந்த வரலட்சுமி!

கடந்த ஒரு மாதத்தில் இந்தியாவில் உள்ள ஐந்து நகரங்களில் புளூ வேல் கேம் சார்ந்த தேடல் அதிகமாகியுள்ளது.