ஓடி ஆடி விளையாடுபவர்கள் அனைவரும் சந்தோஷமாகத்தான் இருக்காங்க… ஆனால் இந்த நோகாமல் ஆன்லைன்ல கேம் விளையாடுரவங்களுக்குதான் அதிக மன உளைச்சல் பிரச்சனைகள் வருது.

சரி கதைக்கு வருவோம். Blue Whale அல்லது Blue Whale Challenge என்று சொல்லப்படுகிற ஆன்லைன் கேம்னால உலகம் முழுதும் கிட்டதட்ட எல்லா நாடுகளிலும் நம்ம இந்தியா உட்பட பதின்வயது இளைஞர்கள், இளைஞிகள் தற்கொலை செஞ்சுட்டு இருக்காங்க.

அப்படி என்னதான் இந்த கேம்ல நடக்குதுன்னு கேட்டால், இதுல 50 ஸ்டேஜ்கள் இருக்கு. ஒவ்வொரு ஸ்டேஜ் போறதுக்கும் அதுல கொடுக்கிற டாஸ்க்கை செய்து முடித்து அதை போட்டோ அல்லது வீடியோ எடுத்து அவுங்களுக்கு அனுப்பனும், அதை கேம் குழு சரிபார்த்துவிட்டு உங்களை அடுத்த ஸ்டேஜ்க்கு அனுமதிப்பாங்க.

இப்படி ஒவ்வொரு ஸ்டேஜ் ஆக போகணும். போக போக டாஸ்க் எப்படி இருக்கும்னா உங்க கையை பிளேடுனால கீரிக்குங்க, உங்கள் விரலை ரத்தம் வரும் வரை கடிங்க, உங்க வீட்ல இருக்க குழந்தைய துன்புருத்துங்க, இப்படி கொடூரமாய் இருக்கும். இதன் கடைசி ஸ்டேஜ்தான் அதிர்ச்சிகரமானது. ஆம் கடைசி ஸ்டேஜ்ஜில் நீங்கள் தற்கொலை செய்து கொள்ளவேண்டும் அப்பொழுதுதான் கேம் நிறைவடைந்து வெற்றி பெறுவீர்.

அதுவும் நீங்கள் தற்கொலை செய்துகொள்வதை அவர்களுக்கு லைவில் காட்ட வேண்டும். இந்த கொடூர விளையாட்டை பல நாடுகள் தடை செய்துவிட்டன. பல நாடுகளில் காவல்துறை மூலம் பெற்றோர்களுக்கு எச்சரிக்கை அறிவிக்கப்படுகிறது.

நூற்றுக்கணக்கானோர் சாக காரணமான இந்த கேம்மை உருவாகியவன் சொல்லும் காரணம் கேட்டால் அதிர்ந்து போவீர்கள். இந்த உலகத்தில் கோழைகள் வாழத்தகுதியற்றவர்கள், அதனால்தான் உலகை காக்க கோழைகளை தற்கொலை செய்ய தூண்டுகிறேன் என்று கூறியுள்ளான்.

இந்த கேமிலிருந்து வெளியேற நினைக்கும் சிறுவர்களை ஒரு தனிக்குழு கொண்டு உங்கள் பெற்றோர்களை கொன்றுவிடுவோம் என்று பயமுறுத்தி விளையாட்டை தொடர்ந்து விளையாட வைத்துள்ளனர். தற்கொலை நடைபெறும் ஒவ்வொரு முறையும் இந்த கேம் கம்பெனி அதனை சாதனையாக கொண்டாடியுள்ளனர்.

அவர்கள் விடும் சவால் இதுதான்: இந்த விளையாட்டை முடிந்தால் தற்கொலை செய்து கொள்ளாமல் விளையாடுங்கள் பார்ப்போம்.

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: அட பைத்தியம் புடிச்ச குரங்குகளா!!!