புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

அதென்னய்யா திடீர் தளபதி!. ப்ளூ சட்டை மாறனுக்கு வாண்டடாக கன்டென்ட் கொடுத்த SK

Amaran Review: பிரபல யூடியூபர் ப்ளூ சட்டை மாறன் ஏகத்துக்கும் நடிகர்களை நக்கலாக பேசக்கூடியவர். ரஜினி, கமல், விஜய், அஜித் என இவர் விமர்சிக்காத நடிகர்களை இல்லை என சொல்லலாம். அதிலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரஜினியை பற்றி இவர் பகிர்ந்த கருத்துக்கள் எல்லாம் பெரிய அளவில் விமர்சனத்திற்கு உள்ளானது.

பெரிய ஹீரோக்களை இப்படி பேசுகிறார் என்றால், வளர்ந்து வரும் நடிகர்களை சும்மாவா விட்டு வைப்பார். அப்படித்தான் சிவகார்த்திகேயன் தற்போது ப்ளூ சட்டை வாயில் சிக்கி இருக்கிறார். ஓரளவுக்கு டாப் லிஸ்டில் வந்து கொண்டிருந்த சிவகார்த்திகேயனை மொத்தமாய் முடித்துவிட்டது என்னவோ வெங்கட் பிரபு தான்.

அவராக முன்னேறி வந்தால் கூட விஜய் இடத்தில் அசால்ட் ஆக உக்காந்து இருப்பார். அவரை வம்படியாய் இழுத்து வந்து விஜய் கையில் இருந்த துப்பாக்கியை வாங்க வைத்து படாத பாடு படுத்தி விட்டார் வெங்கட் பிரபு. போற பக்கம் எல்லாம் சிவகார்த்திகேயனையும் அந்த துப்பாக்கியையும் விசாரிக்காதவர்களே இல்லை.

அதென்னய்யா திடீர் தளபதி!

சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படம் ரிலீஸ் ஆகி பெரிய அளவில் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. எப்போதுமே எந்த ஒரு படத்தையும் மனம் திறந்து பாராட்டும் அளவுக்கு ப்ளூ சட்டை மாறன் இறந்தது கிடையாது.

ஆனால் அமரன் படத்தை பொருத்தவரைக்கும் ஒன்று இரண்டு மைனஸ் மட்டும் சொல்லி படத்தை நல்ல படம் என்று விமர்சித்து விட்டார். இருந்தாலும் போற போக்கில் துப்பாக்கி வாங்கிய சிவகார்த்திகேயனை சும்மா விட்டு வைக்கவில்லை.

வார்த்தைக்கு வார்த்தை திடீர் தளபதி என சொல்லி வம்பு இழுத்து வைத்திருக்கிறார். அமரன் படத்தின் விமர்சனத்தை தாண்டி ப்ளூ சட்டை மாறன் சொல்லும் திடீர் தளபதி வார்த்தைக்காகவே அந்த வீடியோ இப்போது வைரல் ஆகி கொண்டிருக்கிறது.

- Advertisement -

Trending News