வெள்ளிக்கிழமை, நவம்பர் 8, 2024

அமிதாப் மாமாவாலயே படத்தை காப்பாத்த முடியல.. இனி படம் விளங்கின மாதிரி தான்.. வன்மத்தின் உச்சத்தில் மாறன்

கூலி படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, செளபின் சாஹீர், சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அமீர்கான் இந்த படத்தில் நடிக்கப்போவது உறுதியாகி உள்ளது. வேட்டையன் படத்திற்கு கலவையான விமர்சனம் வர, அதை எதையும் தலையில் ஏற்றி கொள்ளாமல், தனது உடல் நலத்தை பேணி பாதுகாத்து அடுத்த படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் ரஜினிகாந்த்.

இந்த நிலையில், சூரியனை பார்த்து நாய் குலைப்பது போல, ப்ளூ சட்டை மாறன், பேசி கொண்டிருக்கிறார். ரஜினிகாந்தையே வேறொரு நல்ல போலீஸ் அதிகாரியை வைத்து என்கவுன்ட்டர் செய்ய வேண்டும். ஆனால், கடைசியில் அவர் அமிதாப் பச்சனை வைத்துக் கொண்டு பாடம் நடத்தி வருகிறார் என்று வேட்டையன் படத்தை ரொம்ப மோசமாக விமர்சித்திருந்தார்.

எல்லாவற்றையும் திணித்துள்ளார் இயக்குனர், ஆனாலும் படத்தில் கன்டென்ட் இல்லை. வயதான காலத்தில் எதுக்கு என்று பேசியது ரஜினி ரசிகர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தற்போது அமீர் கான் படத்தில் கமிட் ஆனதையும் விமர்சித்திருக்கிறார் ப்ளூ சட்டை மாறன்.

அங்கையே ஒன்னும் இல்ல.. இங்க என்ன பண்ண போறாரு

தொடர்ந்து பலபேரின் உழைப்பை கேலி செய்கிறேன் என்ற பெயரில் மோசமான கருத்துக்களை பதிவிட்டு வரும், இவர் மீது யாரவது ஒரு அவதூறு வழக்கு போட மாட்டார்களா என்றெல்லாம் பலர் யோசித்திருப்போம். ஆனாலும், எத்தனை பேர் அசிங்கமாக திட்டினாலும், செய்யும் தொழிலே தெய்வம் என்று இந்த வேலையை பார்த்து வருகிறார்.

அஇந்த நிலையில், தற்போது, “அமிதாப்பால் வேட்டையனை காப்பாற்ற முடியவில்லை. இப்போது கூலியில் அமீர்கான் நடிப்பது உறுதியாகியுள்ளது. இதுல என்ன தொழில் ரகசியம்னா.. அமீர்கான் கடைசியா ஹீரோவா நடிச்ச Thugs of Hindustan, Lal Singh Chadda..ரெண்டுமே அட்டர் ஃப்ளாப். இவராவது தலைவரை காப்பாற்றுவாரா?” என அமீர்கானையும் சேர்த்து ட்ரோல் செய்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

- Advertisement -spot_img

Trending News