முதல்வர் விஜய்ன்னு என் வாயால எப்படி கூப்பிடுவேன்.. நாரதர் வேலையை ஆரம்பித்த ப்ளூ சட்டை

Vijay: விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்தாலும் ஆரம்பித்தார் சோசியல் மீடியா முழுவதும் அவர் பற்றிய பேச்சாக தான் இருக்கிறது. எது செய்தாலும் அதை ட்ரெண்ட் செய்து வரும் விஜய் ரசிகர்கள் ஒரு பக்கம் அவரை குறை சொல்லும் அரசியல் பிரபலங்கள் ஒரு பக்கம் என இருக்கிறது.

blue sattai maran
blue sattai maran

இதில் ப்ளூ சட்டை மாறன் வேறு தன் பங்குக்கு அவரை அவ்வப்போது கிண்டல் செய்து மீம்ஸ் போட்டு வருகிறார். அப்படித்தான் இன்று விஜய் பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு பெரியார் திடலில் உள்ள அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

blue sattai maran
blue sattai maran

அந்த வீடியோக்களும் போட்டோக்களும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை ரஜினியுடன் கோர்த்துவிட்டு சில மீம்ஸ் போட்டு நக்கல் அடித்துள்ளார் ப்ளூ சட்டை மாறன். இதன் மூலம் இரு தரப்பு ரசிகர்களையும் கோபப்படுத்தி நாரதர் வேலையையும் பார்த்துள்ளார்.

ரஜினி ரசிகர்களை வெறுப்பேற்றும் ப்ளூ சட்டை

அதன்படி ஒரு வேளை தேர்தல்ல ஜெயிச்சுட்டா மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்களே அப்படின்னு எப்படி என் வாயால கூப்பிடுவேன். தமிழ்நாட்டில எப்படி இருப்பேன்? உங்க மூஞ்சில எப்படி முழிப்பேன்? என ரஜினி சொல்வது போல் மீம்ஸ் போட்டுள்ளார்.

blue sattai maran
blue sattai maran

இதே போல் இன்னும் சில நக்கல் மீம்ஸ்களையும் போட்டு தலைவர் ரசிகர்களை வெறுப்பேற்றி இருக்கிறார். அதற்கு அவர்கள் தகுந்தா பதிலடி கொடுத்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாகவே இந்த ஒரு வேலையை தான் ப்ளூ சட்டை மாறன் தவறாமல் பார்த்து வருகிறார்.

இதில் வரும் 20ம் தேதி வேட்டையன் இசை வெளியீட்டு விழா வேறு வருகிறது. அதை வைத்து இவர் என்னென்ன கிண்டல் அடிக்கப் போகிறாரோ தெரியவில்லை. அதேபோல் அக்டோபர் 10 படம் ரிலீசையும் இவர் ரிவ்யூ மூலம் வச்சு செய்ய காத்திருக்கிறார்.

ப்ளூ சட்டை மாறனின் நக்கல் பதிவு

- Advertisement -spot_img

Trending News