செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

ஆடியோ லாஞ்சில் ஆத்துவாங்க பாருங்க.. கோலிவூட் ஹீரோக்களின் செண்டிமெண்ட் ஆயுதத்தை கழுவி ஊத்திய ப்ளூ சட்டை

Nayanthara: வார இறுதி நாட்களில் கங்குவா படத்தின் கலெக்ஷன் தான் பெரிய கண்டன்ட்டாக மாறும் என பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதையே தூக்கி சாப்பிட்டு விட்டார் நடிகை நயன்தாரா. அவங்க படத்தோட காட்சிகளை அவங்க உபயோகிக்கிறதுல என்ன தப்பு, அதை எடுக்க கூடாதுன்னு சொல்லிட்டாரு அப்புறம் எதுக்கு எடுக்குறாங்க என இரண்டு குழு பிரிந்து விட்டது.

இனி இதில் யார் பெருசு அடுத்த ரெண்டு நாட்கள் முழுக்க சமூக வலைத்தளங்களில் அடிதடி நடந்து முடிந்து விடும். எல்லோரும் தங்களுடைய கருத்துக்களை சொல்லிவிட்டார்கள் ப்ளூ சட்டை மாறன் சும்மா இருப்பாரா. தனுஷோட சேர்த்து தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்கள் அத்தனை பேரையும் விமர்சனம் செய்திருக்கிறார் ப்ளூ சட்டை.

தன்னுடைய எக்ஸ் பதிவில்,

உண்மை. கோலிவுட் ஹீரோக்கள் செஞ்ச தப்பை ஒத்துக்கவே மாட்டாங்க. ஆடியோ லாஞ்ச்ல ஆத்துவாங்க பாருங்க சென்டிமென்ட் டீயை.. ஆத்தாடி!!

நம்மாளு இப்பவே ஸ்க்ரிப்டை ரெடி பண்ணி இருப்பாரு இப்படி.. ‘ஒருவேளை சோத்துக்கு நான் பட்ட கஷ்டம் எனக்குதான் தெரியும். எல்லா சதிகளையும், துரோகங்களையும் தாண்டி.. இப்ப வளந்து நிக்கறேன். அதுக்கு காரணம் என் உயிரினும் மேலான ரசிகர்கள் நீங்கதான்.

என் வளர்ச்சி பிடிக்காம வதந்தி பரப்பறாங்க. ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம்… Few minutes after kutti kadhai..

அதனால..எதை பத்தியும் கவலைப்படாம முன்னேறி போய்கிட்டே இருக்கனும். வெறுப்பு வேண்டாம். அன்பை விதைப்போம். ஓம் நமச்சிவாய’

கோலிவுட் ஹீரோக்களின் பிரபல சென்டிமென்ட் ஆயுதங்கள்:

Financier: சார்.. வாங்குன கடனை எப்பதான் திருப்பி தருவீங்க?

Hero: என் வளர்ச்சி உங்களுக்கு புடிக்கலையா?

Reporter: சார்.. அந்த மியூசிக் டைரக்டர் வீட்ல பூந்து கசமுசா பண்ணீங்களாமே?

Hero: எந்த சினிமா பின்னணியும் இல்லாம அடிபட்டு மேல வந்துருக்கேன்.

Fan: என்ன தலைவா.‌. இவ்வளவு காட்டு மொக்கை படத்துல நடிச்சிருக்க?

Hero: இக்னோர் நெகடிவிட்டி. உலகமே அன்பால் இயங்குது. பாசிடிவா பேசுங்க.

Reporter: போன படம் பெரிய ஃப்ளாப் ஆகிடுச்சே. .

Hero: ஒரு ஊர்ல ஒரு கழுகு இருந்ததாம். அது ஒருநாள்.. தாளிக்க கடுகு வாங்க கடைக்கி போச்சாம்.

Public: கடைசி வரைக்கும் ஒருத்தனாவது கேட்ட கேள்விக்கு பதில் சொல்றானா பாத்தியா.. அட நாரைகளா. என்று ஒட்டுமொத்த ஹீரோக்களையும் பங்கமாய் கலாய்த்து இருக்கிறார்.

- Advertisement -

Trending News