ஏம்பா சவுண்ட் பார்ட்டி லட்டு பத்தி கருத்து சொல்லல.. நக்கல் நடிகரை வம்புக்கிழுக்கும் ப்ளூ சட்டை

Blue Sattai Maran: கடந்த சில வாரங்களாக சோசியல் மீடியாவில் பலதரப்பட்ட பிரச்சனைகள் சர்ச்சையை கிளப்பிக் கொண்டிருக்கிறது. ஜெயம் ரவியின் விவாகரத்தில் ஆரம்பித்து மணிமேகலை, பிரியங்கா சண்டை, லட்டு பிரச்சனை, லிப்ஸ்டிக் விவகாரம் என ஒரே அக்கப்போர் தான்.

இதில் திருப்பதி லட்டு விவகாரம் தான் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் இதை நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கிண்டல் அடித்து வருகின்றனர். மறுபக்கம் கோவிலின் புனிதம் கெட்டுவிட்டது என சில பரிகாரங்கள் செய்யப்பட்டு வருகின்றனர்.

அதேபோல் இந்த லட்டு விவகாரத்தில் கார்த்தி மன்னிப்பு கேட்டது கூட தமிழ்நாட்டின் மான பிரச்சினையாக மாறி இருக்கிறது. இப்படி ரணகளமாக சென்று கொண்டிருக்கும் நிலையில் ப்ளூ சட்டை மாறன் தன் பங்குக்கு ஒரு நடிகரை வம்புக்கு இழுத்துள்ளார்.

எப்போதுமே ரஜினி, விஜய், அஜித் என சீண்டிப் பார்க்கும் இவர் தற்போது சத்யராஜை கலாய்த்து தள்ளியுள்ளார். தமிழர்களுக்கு ஒரு பிரச்சனை என வந்தால் முதல் ஆளாக இவர்தான் குரல் கொடுப்பார். ஆனால் அதெல்லாம் முடிந்து போன கதை.

blue sattai maran
blue sattai maran

ப்ளூ சட்டையின் நக்கல் ட்வீட்

இப்போது அப்படி கிடையாது என சொல்லும் வகையில் ஒரு நக்கல் ட்வீட்டை ப்ளூ சட்டை மாறன் போட்டுள்ளார். அதாவது, ஏம்பா முன்னாடி எல்லாம் தமிழர்களுக்கு என்று ஒரு பிரச்சனை வந்தா தம் கட்டி சவுண்டு விடுவ.

அதிரடியா நாத்திகம் பேசுவ இப்ப ஏன் சைலன்ட் ஆயிட்ட. லட்டு பத்தி கருத்து சொல்லலையா என கேள்வி கேட்டு அதற்கு ஒரு பதிலையும் அவரே கொடுத்துள்ளார். அதாவது நான் இப்போ பான் இந்தியா நடிகர் குறிப்பா தெலுங்குல. நமக்கு எதுக்கு வம்புன்னு பம்மிட்டேன் என மீம்ஸ் போட்டுள்ளார்.

இதைப் பார்த்த நெட்டிசன்கள் ப்ளூ சட்டை ஒரே பதிவில் சூப்பர் ஸ்டார், சூர்யா, கார்த்தி, சத்யராஜ் என எல்லோரையும் கலாய்த்து தள்ளி இருக்கிறார் என கூறி வருகின்றனர். ஆனால் இந்த பதிவு சத்யராஜுக்கு தான் என்பது வெளிப்படையாகவே தெரிகிறது.

ஏற்கனவே பாகுபலி ரிலீஸ் சமயத்தில் இவர் மன்னிப்பு கேட்டது சர்ச்சையானது. அதை தொடர்ந்து கார்த்தி மன்னிப்பு கேட்டு வம்பில் சிக்கி இருக்கிறார். இதைத்தான் ப்ளூ சட்டை மாறனும் நாசுக்காக பதிவிட்டுள்ளார்.

சத்யராஜை கலாய்த்து தள்ளிய ப்ளூ சட்டை

- Advertisement -spot_img

Trending News