Tamil Cinema News | சினிமா செய்திகள்
ப்ளூ சட்டை மாறன் இயக்கும் படத்தின் பெயர் தெரியுமா? அட! இது புதுசா இருக்கே
ஒரே ஒரு சட்டையை போட்டுக் கொண்டு தமிழ் சினிமாவை பார்ட் பார்ட்டாக பிரித்தெரிந்தவர் ப்ளூ சட்டை மாறன். தமிழ் டாக்கீஸ் என்ற யூடியூப் சேனல் ஒன்றில் பணியாற்றுபவர் ப்ளூ சட்டை மாறன்.
வாராவாரம் வெளிவரும் திரைப்படங்களை பாரபட்சம் பார்க்காமல் ரிவியூ என்ற பெயரில் கிழித்தெறிவதே வழக்கமாக வைத்துக் கொண்டுள்ளார். இதனால் பல நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் சாபத்துக்கும் உள்ளாகியுள்ளார்.
ஏற்கனவே திரையரங்குகளுக்கு ரசிகர்களை கொண்டுவருவது சிரமமாக உள்ளது. அதிலும் இந்த மாதிரி தரக்குறைவாக விமர்சனம் செய்தால் நிச்சயமாக படங்கள் ஓடாது என்பதால் தயாரிப்பாளர்கள் அவர் மீது ஒரு கண் வைத்துள்ளனர்.
இருந்தும் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் கேவலப் படுத்தி வருகிறார். தற்போது அவருக்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சவால் ஒன்றை கொடுத்துள்ளார். அதன்படி ப்ளூ சட்டை மாறன் தற்போது இயக்குனராகி படம் ஒன்றை இயக்கி வருகிறார்.
இந்த படத்திற்கு ஆன்ட்டி இந்தியன் எனவும் பெயர் வைத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. அரசியல்வாதிகள் தன் படத்தையும் ஓடவைத்து விடுவார்கள் என்ற நம்பிக்கையில் வைத்தாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
